பெரும்பாலோர் அறிமுகம் இல்லாதவருக்கு உதவுவது என்பது பயணத்தின்போது வழிகாட்டுவதுதான். அப்படியொரு உதவி செய்தவர் அடைந்த பலன் என்ன தெரியுமா?
திருச்சுழி தாலுகா சிறுவனூரைச் சேர்ந்த கார்த்திக், 19-ஆம் தேதி காலை 6-30 மணியளவில், சொந்த ஊரான வெள்ளக்கல்லில் கொண்டுபோய் விடுவதற்காக, தன் மனைவி காத்தா மற்றும் மகள் குருதேவி ஆகியோரை பல்சர் டூ வீலரில் அழைத்துச் சென்றபோது, நரிக்குடி – திருப்புவனம் சாலையில், அவர்களுக்குப் பின்னால் நீல நிற பைக்கில் பின்புறம் அமர்ந்து வந்த ரோஸ் கலர் சட்டை அணிந்த நபர் “நரிக்குடிக்கு எப்படி போகணும்?” என்று வழி கேட்டிருக்கிறார். கார்த்திக் பாதையைக் காட்ட முனைந்த அந்த நெருக்கத்தில், அவர் மீது மிளகாய்ப் பொடியைத் தூவிய அந்த நபர், குருதேவி கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்கச் செயினைப் பறித்துக்கொண்டு, திருப்புவனம் நோக்கித் தப்பிவிட்டார். பிறகென்ன? ஏ.முக்குளம் காவல் நிலையத்தில் தங்களது தங்கச் செயினை கண்டுபிடித்து மீட்டுத்தரும்படி புகாரளிக்க, வழக்கு பதிவாகியிருக்கிறது.
நகைகளைப் பறிக்கும் வழிப்பறிக் கொள்ளையர்கள், வழிகேட்பதை ஒரு உத்தியாக வைத்திருப்பது, உதவியவருக்கு பெரும் கஷ்டத்தைத் தருவது, கொடுமையிலும் கொடுமையல்லவா?