
அமைச்சர் தங்கமணி தனது மாவட்டமான திருச்செங்கோட்டில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்து கொண்டார். பிளாஸ்டிக் பொருட்களுக்கான மாற்று என்ற பெயரில் அந்த விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
அவ்விழாவில் கலந்து கொண்ட மக்களுக்கு சணல் மூலம் தயார் செய்யப்பட்ட பை’களை அமைச்சர் தங்கமணி கொடுத்துக் கொண்டிருந்தார். பெண்கள் வரிசையாக வந்து வாங்கிச் சென்றனர். அதில் வந்த ஒரு பெண் திடீரென அமைச்சர் தங்கமணிக்கு பாசிமாலை அணிவித்தார். கூட இருந்த திருச்செங்கோடு எம்.எல்.ஏ. பொன் சரஸ்வதிக்கும் ஒரு பாசி மாலை போட்டார். அமைச்சருக்கு பாசிமாலை போட்ட அப்பெண் தொடர்ந்து தங்கமணிக்கு வாழ்த்தும் கூறினார் . அப்போது அங்கிருந்த கட்சிக்காரர்கள் அமைச்சர் தங்கமணிக்கு இன்று 58 ,வது பிறந்த நாள். இதை தெரிந்து கொண்டு தான் நரிக்குறவ இனத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் அமைச்சருக்கு பாசிமாலை போட்டு வாழ்த்து தெரிவித்தார் என்றார்கள். இந்த சம்பவத்தால் அமைச்சர் தங்கமணி மிகவும் நெகிழ்ந்து போனாராம்.