Published on 26/03/2018 | Edited on 26/03/2018
சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் 28ந் தேதி டெல்லி உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்கிறார்.
சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுக்கும் மத்திய அரசை கண்டித்து தர்மபுரி மாவட்டம் ஒக்கேனக்கலில் கடந்த 23 ந்தேதி துவங்கி வாகன பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இறுதி நாளான இன்று 25.03.2018 மதியம் 12 மணிக்கு தஞ்சாவூர் மாவட்டம் கல்லனைக்கு வருகை தந்தார். அவரை தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுசெயலாளர் பி.ஆர்.பாண்டியன் சந்தித்து வரவேற்று வாழ்த்து தெரிவித்து உரையாற்றினார்.
அப்போது உரையாற்றிய சரத்குமார், டெல்லியில் மார்ச் 26ம் தேதி துவங்கி நடைபெற உள்ள விவசாயிகள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் 28ந் தேதி தான் கலந்துக் கொள்ள உள்ளதாக அறிவித்தார்.