Skip to main content

கூட்டாஞ்சோறில் சாணி பவுடர் கலந்த சம்பவம்... சிறுவர்கள் மருத்துவமனையில் சேர்ப்பு!!

Published on 11/07/2019 | Edited on 11/07/2019

கோவை தடாகம் அருகே மஞ்சள் தூள் என நினைத்து, சாணி பவுடரை கலந்து கூட்டாஞ்சோறு உண்ட சிறுவர் சிறுமியர்கள் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கோவை தடாகம் அருகே உள்ள திருவள்ளுவர் நகரில் ஐந்து சிறுமிகள் மற்றும் ஒரு சிறுவர் என ஆறு பேரும் நேற்று இரவு 9.30 மணியளவில் கூட்டாஞ்சோறு செய்து விளையாண்டு கொண்டிருந்தனர். அப்போது சிறுமிகள் சோற்றில் மஞ்சள் தூளுக்கு பதில் தவறி, சாணி பவுடரை கலந்து விட்டனர். பின்னர் இதை அறியாத குழந்தைகள் உண்ணும் பொழுது கசப்படிப்பதை அறிந்து சோற்றை வைத்துவிட்டு தங்களது பெற்றோர்களிடம் தகவல் அளித்தனர். 

 Poison in the meals...incident in kovai...


இதையடுத்து பதறிய பெற்றோர்கள் உடனடியாக சாணி பவுடர் கலந்த உணவை உண்ட லோகேஸ்வரி(12), அனுசியா(8), முகுந்தன்(8), ஜீவிதா(14), ஹரிணி, (13) மற்றும் யாழினி(5) என ஆறு பேரையும் கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். 

இங்கே இவர்களுக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து உடல்நலம் தேறிய குழந்தைகளை ஒருங்கிணைந்த குழந்தைகள் நலமையத்திற்கு மாற்றியுள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக தடாகம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிறுவர் சிறுமிகள் விளையாண்டு கொண்டிருந்த விளையாட்டில் ஆபத்தான சாணி பவுடர் கலந்தது கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்