Skip to main content

கோவையில் பெண் உட்பட இருவர் படுகாயம்... அதிமுக கொடி கம்பம் சரிந்து விழுந்ததால் நேர்ந்த விபத்தா?

Published on 12/11/2019 | Edited on 12/11/2019

கோவையில் அதிமுக கொடி கம்பம் சரிந்து விழுந்ததில் லாரி மோதி இளம்பெண் விபத்துக்குள்ளனதாக வெளியான விவகாரத்தில் லாரி ஒட்டுநர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

 

incident inkovai...


கோவை சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரி என்கிற அனுராதா. 30 வயதான இவர் சின்னியம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் கணக்காளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், நேற்று பணிக்கு செல்வதற்காக, ராஜேஸ்வரி தனது இருசக்கர வாகனத்தில் நித்தியானந்தம் என்பவருடன் சென்றுகொண்டிருந்தபோது சென்று கொண்டிருந்த போது, அவிநாசி சாலையில் உள்ள கோல்டுவின்ஸ் பகுதியில் சறுக்கி கீழே விழுந்துள்ளனர். அந்த வழியே பின்னால் வந்த லாரி ராதாவின் கால் மீது ஏறி விபத்து ஏற்பட்டது. படுகாயமடைந்த ராஜேஸ்வரி தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். நித்யானந்தமும் படுகாயமடைந்தார்.

 

incident inkovai...


இதனிடையே அப்குதியில் உள்ள அ.தி.மு.க பிரமுகர் யோகா மாஸ்டர் சுவாமி போமிவர்தன் – தாமரை இல்ல திருமணம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அதற்காக, அவிநாசி சாலையின் ஒரு பகுதி முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு அ.தி.மு.க கொடி கம்பங்களும் வைக்கப்பட்டுள்ளன. சாலையோரத்தில் நடப்பட்டு இருந்த அதிமுக கொடி கம்பம் ராஜேஸ்வரி செல்லும்போது கம்பம் சரிந்து விழுந்தாகவும், அதைத் தவிர்ப்பதற்காக அவர் சடன் பிரேக் போட்டதில் சறுக்கி விட்டு விபத்து ஏற்பட்டதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

 

incident inkovai...

 

மேலும் கொடி கம்பம் சரிந்து விழுந்ததே விபத்து ஏற்பட காரணமெனவும், இதனை காவல் துறையினர் மறைப்பதாகவும் ராஜேஸ்வரியின் உறவினர்கள் புகார் தெரிவித்தனர். அதேசமயம் விபத்திற்கும், கொடி கம்பத்திற்கும் தொடர்பில்லை என காவல் துறையினர் மறுப்பு தெரிவித்தனர். இந்நிலையில் விபத்து ஏற்படுத்திய விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த லாரி ஒட்டுநர் முருகன் மீது, வேகமாகவும், அலட்சியமாகவும் வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்தியதாக கோவை கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அண்மையில் சென்னை பள்ளிக்கரணையில் சுபஸ்ரீ என்ற ஐடி பெண் ஊழியர் சாலையில்  வைத்திருந்த அதிமுக பேனர் விழுந்ததில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில் தற்போது இப்படி ஒரு சம்பவம் நடந்திருப்பது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்