பெற்ற மகளையே, தந்தை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்குடி அருகே மேல்பட்டாம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ஒரு நபருக்கு 2 மகள்கள் உள்ளனர். 17 வயது கொண்ட மூத்த மகள், அப்பகுதியில் உள்ள ஒரு கல்லூரி படித்து வருகிறார். இரண்டாவது மகள் 10 ஆம் வகுப்பு படித்து வருகிறார். 2 மகள்களின் தாயார் இறந்துவிட்ட நிலையில், அவர்கள் இருவரும் தனது தந்தையுடன் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில், நேற்று (18-12-24) இரண்டு பெண்களும் வீட்டில் தனியாக இருந்துள்ளனர். அப்போது வீட்டுக்கு வந்த தந்தை, தனது மூத்த மகளை, வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும், இரண்டாவது மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.
இதில் மனமுடைந்த 2 பேரும், தங்களுக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து கடலூர் மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் பெண்களின், தந்தை மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இதையடுத்து, அவரை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிபதி லட்சுமி ரமேஷ் முன்பு நடைபெற்ற இந்த விசாரணையில், மகளை பாலியல் வன்கொடுமை செய்தது என்பது உறுதியானது. அதன் பிறகு, பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தைக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்.