ஆவடி பூம்பொழில் நகர் பகுதியை சேர்ந்த புஜ்ஜி என்பவர் அவரது வீட்டின் அருகே அடித்து கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்துள்ளார். இதனைக்கண்ட பொதுமக்கள் ஆவடி டேங் பேக்டரி காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக இந்த கொலையை யார் செய்தார்கள் என்பதை ஆவடி டேங் பேக்டரி காவல்நிலைய இன்ஸ்பெக்டர் நடராஜ் விசாரித்து வருகின்றார்.

புஜ்ஜி என்பவருக்கு திருமணமாகி மூன்று பெண் பிள்ளைகள் உள்ளனர். இந்த நிலையில் புஜ்ஜியின் மனைவி நீண்ட நாட்களுக்கு முன்பாக அவரை விட்டுவிட்டு வேறு ஒருவருடன் பெங்களூரில் வாழ்ந்து வருகிறார். இந்த காரணத்தால் தினமும் குடி மட்டுமே வாழ்க்கையென ஒயின்ஷாப்பிலேயே கிடந்துள்ளார்.
இந்தநிலையில் புஜ்ஜி மீது 2010 ஆம் ஆண்டில் இரும்பு கடத்திய ஒரு வழக்கு மட்டுமே உள்ள நிலையில், இதை வைத்துக்கொண்டு தான் பெரிய ரவுடி தொனியில் ஒயின்ஷாப்புக்கு வருவரிடம் மிரட்டி குடிப்பதே இவரின் பணியாகவே இருந்து வந்துள்ளது. இந்த சூழ்நிலையில் தான் நேற்று இரவு அவரது வீட்டின் அருகே அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.