Skip to main content

அறந்தாங்கியில் ஒரு குட்டி காசி கைது...!

Published on 23/05/2020 | Edited on 24/05/2020

முகநூல் மூலம் பல பெண்களை ஏமாற்றி பணம் நகை பறித்த அறந்தாங்கி இளைஞர் பாதிக்கப்பட்ட ஒரு பெண் கொடுத்த புகாரில் கைதாகி சிறை சென்றுள்ளார். மற்ற பெண்கள் புகார் கொடுக்கவில்லை என்பதால் போலீசார் ஒரே வழக்கோடு முடிக்க முடிவெடுத்துவிட்டனர்.


புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி கோபாலசமுத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் முகமது அப்சல் (23)   திருமணம் ஆகாத ஊர் சுற்றும் வாலிபர். கேட்டரிங் முடித்து வீட்டிலேயே அவ்வப்போது உணவு தயாரிப்பதும், மாட்டுவண்டி பந்தயங்களில் ஆர்வத்தோடு கலந்துகொள்வதும் அவரது விருப்பங்கள்.

 

 

incident in aranthaangi


இந்நிலையில் ஓய்வு நேரங்களை முகநூல் மூலம் தனியாக இருக்கும் பெண்களுக்கு வசீகர வார்த்தைகள் மூலம் வலைவிரிப்பதும் வலையில் விழுந்த பெண்களின் வீடுகளுக்கு செல்வதும் அவர்களின் நகை பணம் ஆகியவற்றை அபகரிப்பதும் வழக்கமாக வைத்திருக்கிறார். இந்த குட்டி காசி அப்சல் வலையில்.. சென்னையில் திருமணமாகாத அரசு மருத்துவமனை பெண் ஊழியர், காரைக்குடி, மதுரை, அறந்தாங்கி உள்ளிட்ட பகுதிகளில் பல பெண்களிடம் பழக்கத்தை விரிவாக்கிக் கொண்டார்.

இந்நிலையில் கடந்த மூன்று வருடமாக அறந்தாங்கி இஸ்லாமிய பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்தப் பெண்ணுக்கு திருமணமாகி கணவர் வெளிநாட்டில் வேலை செய்து வரும் நிலையில் இரண்டு குழந்தைகள்கள் உள்ளனர். கணவர் வெளிநாட்டில் சம்பாதித்து அனுப்பிய நகை, பணம் உள்ளிட்டவைகளை முகமது அப்சல் வாங்கிக் கொண்டார். தற்போது கணவர் வெளிநாட்டில் வேலை செய்யும் கணவர் வர உள்ளதால் தான் கொடுத்த நகை மற்றும் பணத்தை ஒப்படைக்க வேண்டும் என்று முகமது அப்சலிடம் பொருட்களை திரும்ப  கேட்ட போது தான் அந்தப் பெண் மிரட்டப்படுகிறார்.

திருப்பித் தர மறுத்த முகமது அப்சல் அவரை மிரட்டும் விதமாக வெளிநாட்டில் வசிக்கும் அவரின் கணவருக்கு, முகமது அப்சலும் அந்தப் பெண்ணும் பேசிய உரையாடல் பதிவை அனுப்பி இருக்கின்றார்.

 

incident in aranthaangi

 

இது பூதாகரமாக வெடித்து அவரின் கணவர் தொலைபேசியில் சண்டை நடந்து முடிந்தது.  தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண் அறந்தாங்கி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். முகமது அப்சலை பிடித்து விசாரித்த போலீசார் அதிர்ச்சி அடையும் விதமாக இன்னும் நான்கு பெண்களுடன் தொடர்பில் இருப்பதாகவும், அவர்களில் சிலரிடம் பணத்தை பெற்றிருப்பதாகவும் போலீசாரின் விசாரணையில் தெரிவித்ததாக தெரிகிறது.

மற்ற பெண்கள் புகார் அளிக்காததால் அவர்களை பற்றிய தகவல் வெளியிடப்படவில்லை. கைது செய்யப்பட்ட முகமது அப்சல் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார். மற்ற பெண்கள் புகார் கொடுக்க வேண்டும் என்று காத்திருக்காமல் அவனது வாக்குமூலத்தின் மூலமே பாதிக்கப்பட்ட பெண்கள் இழந்த பொருட்களை மீட்க காவல்துறை நடவடிக்கை எடுக்கலாம்.

 

 

 

சார்ந்த செய்திகள்