




ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை முகமது சதக் இன்ஜினியரிங் கல்லூரியில் அடிப்படை எழுத்தறிவு சான்றிதழ் வழங்குதல் மற்றும் தன்னார்வலர்களுக்கான பயிற்சி பணிமனை தொடக்க விழா இன்று (22/07/2022) நடைபெற்றது.
தன்னார்வலர்களுக்கான பயிற்சி தொடக்க விழா மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் தலைமையில் நடைபெற்றது. பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககம் இணை இயக்குநர் அமுதவல்லி வரவேற்புரையாற்றினார். பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககம் இயக்குநர் குப்புசாமி திட்ட விளக்க உரையாற்றினார்.
பிற்படுத்தப்பட்ட நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் வயது வந்தோர் கல்வி திட்டம் அடிப்படை எழுத்தறிவுச் சான்றிதழ் வழங்கி தன்னார்வலர்களுக்கான பயிற்சிப் பணிமனையை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினர் நவாஸ்கனி எம்.பி.
சட்டமன்ற உறுப்பினர்கள் காதர் பாட்சா முத்துராமலிங்கம், முன்னாள் அமைச்சர் சத்தியமூர்த்தி, முதுகுளத்தூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் முருகவேல், சாயல்குடி வேலுச்சாமி, முன்னாள் எம்.பி. பவானி ராஜேந்திரன், கீழக்கரை நகரச் செயலாளர் பஷீர் அகமத் ஆகியோர் கலந்துக் கொண்டனர். விழா நிறைவில் முதன்மைக் கல்வி அலுவலர் பாலுமுத்து நன்றி கூறினார்.