எல்லைத் தாண்டி மீன் பிடித்தாகக் கூறி ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துள்ளனர்.
ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் இன்று காலை 500க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்கக் கடலுக்குச் சென்றனர். இவர்களில் கச்சத்தீவு - தனுஷ்கோடி இடையே இரு படகுகளில் 16 மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்துள்ளனர். அப்போது அங்கு ரோந்து படகுகளில் வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை மீன் பிடிக்கவிடாமல் தாக்கியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி 2 படகுகளுடன் 16 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துள்ளனர். மேலும் இவர்களை இலங்கை முகாமிற்கு அழைத்துச் செல்ல உள்ளனர். அதன் பின்னர் நாளை (15.10.2023) காலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர். அதனைத் தொடர்ந்து மீனவர்களைச் சிறையில் அடைக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.