Skip to main content

“தொடக்கப்பள்ளி மாணவர்கள் கவனத்திற்கு...” - பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு!

Published on 30/03/2025 | Edited on 30/03/2025

 

Important announcement from the Dept of School Education primary school students

தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வதைத்து  வருகிறது. இதன் காரணமாகத் தொடக்கப் பள்ளிகளுக்கு முன்கூட்டியே கோடை விடுமுறை விடப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கான ஆண்டு இறுதித்தேர்வுகள் வரும் ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி வரை நடைபெற இருந்தது.

இந்நிலையில் ஏப்ரல் 17ஆம் தேதியே முன்கூட்டியே முடிக்க பள்ளிக்கல்வித்துறை முடிவெடுத்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “தொடக்கக் கல்வி இயக்கக நிர்வாகத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு 09.04.2025 முதல் 21.04.2025 வரை மூன்றாம் பருவத் தேர்வு மற்றும் ஆண்டு இறுதி தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் தற்போது தீவிரமாக இருக்கிறது.

இதனால் பல்வேறு தரப்பினரின் கோரிக்கைகள் மற்றும் பெற்றோர்களின் வேண்டுகோளை ஏற்றுத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின்படியும், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழிகாட்டுதல்களின்படியும் தேர்வுகள் முன்கூட்டியே தொடங்க திட்டமிடப்பட்டு உள்ளது. அதன்படி வருகின்ற 07.04.2025 முதல் 17.04.2025 வரை தேர்வுகள் நடைபெறும் எனத் தொடக்கக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்