மேலவளவு கொலை குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற போராட்டத்தில் காவல்துறைக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு, ஏற்பட்டு போராட்டத்தின் கைது செய்யப்பட்டுள்ளனர்.

1996 ஆம் ஆண்டு மதுரை மாவட்டம் மேலவளவில் பஞ்சாயத்து தலைவர் முருகேசன் உட்பட 7 பேர் கொடூரமான முறையில் வெட்டி படுகொலை செய்யப்பட்டனர். இவ்வழக்கில் 13 பேர் ஆயுள் கைதியாக மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்கள். கடந்த வாரம் தமிழக அரசு 13 பேரையும் பொது மன்னிப்பில் விடுதலை செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரை கோரிப்பாளையத்தில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் 100 க்கும் மேற்பட்டவர்கள் போராட்டம் நடத்தினார்கள்.


போராட்டத்திற்கு அனுமதி மறுத்து காவல்துறையினர் போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்தியதால் காவல்துறைக்கும் போராட்டக்காரர்களுக்கும் தள்ளு முள்ளு ஏற்பட்டது. காவல்துறையின் தடுப்பை மீறி ஆர்ப்பாட்டம் நடத்திய போராட்டக்காரர்கள் சாலை மறியலும் ஈடுபட்டனர். பின்னர் அனைவரையும் காவல்துறையினர் குண்டு கட்டாக தூக்கி கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் சற்று பரபரப்பு ஏற்பட்டது.