இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில், ''என்.எஸ்.கிருஷ்ணன் ஒரு பாட்டு பாடுவார் 'பட்டனை தட்டிவிட்டால் நாலு இட்லி வரும், கூட சட்னியும் காபியும் வரும்' என்று, இப்பொழுது பட்டனை தட்டிவிட்டால் விஸ்கி வரும், பட்டனை தட்டி விட்டால் பிராந்தி, வரும் பட்டனை தட்டி விட்டால் ரம்மு வரும், பட்டனை தட்டி வரும் தட்டிவிட்டால் ஜின்னு வரும். இதுதான் இந்த ஆட்சியுடைய சாதனை. பட்டிதொட்டி எல்லாம் குடிக்க கற்றுக் கொடுத்து இளைஞர்களை சீரழித்தது திமுக.
இன்று முற்றிலுமாக எங்கு பார்த்தாலும் மது இருக்க வேண்டும்; எப்பொழுது பார்த்தாலும் மது அருந்த வேண்டும் என எண்ணத்தில் இதை செய்துள்ளது. வசந்த மாளிகை படம் பார்த்தீர்களா அதில் சிவாஜி கணேசன் காலையிலிருந்து மாலை வரை குடித்துக் கொண்டே இருப்பார். அது அந்த படத்தில் அவருடைய கேரக்டர். அவரை குறை சொல்லவில்லை. அது போன்று இந்த அரசாங்கம் இளைஞர்கள் எதைப் பற்றியும் சிந்திக்க கூடாது; ஆட்சியைப் பற்றி சிந்திக்காதீர்கள்; வளர்ச்சி இல்லாததை சிந்திக்காதீர்கள்; நாட்டினுடைய அவல நிலையை சிந்திக்காதீர்கள்; காலையிலிருந்து மது போதையில் இருங்க என இப்படி செய்து உள்ளார்கள்'' என்றார்.