Skip to main content

பெட்ரோ கெமிக்கல் திட்டம் செயல்படுத்தினால் 25 லட்சம் ஏக்கர் விளை நிலங்கள் பாழாகும்: ஜி.கே.வாசன்

Published on 20/08/2017 | Edited on 20/08/2017
பெட்ரோ கெமிக்கல் திட்டம் செயல்படுத்தினால் 25 லட்சம் ஏக்கர் விளை நிலங்கள் பாழாகும்: ஜி.கே.வாசன்



பெட்ரோ கெமிக்கல் திட்டம் செயல்படுத்தினால் 25 லட்சம் ஏக்கர் விளை நிலங்கள் பாழாகும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் முப்பனார் 86-வது பிறந்த நாள் மற்றும் விவசாயிகள் தின விழா நடைபெற்றது. இவ்விழாவில் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

கடலூர், நாகை மற்றும் காவிரி டெல்டா மாவட்டங்களில் பெட்ரோ கொமிக்கல்ஸ் திட்டம் செயல்படுத்தக் கூடாது. அந்த திட்டத்தை செயல்படுத்தினால் 25 லட்சம் ஏக்கர் விளை நிலங்கள் பாழாகும், 150 லட்சம் டன் நெல் உற்பத்தி பாதிப்பு ஏற்படும். விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கின்ற இயக்கம் த.மா.கா. கட்சி ஆகும். இவ்வாறு அவர் பேசினார்.

- சுந்தரபாண்டியன்

சார்ந்த செய்திகள்