Skip to main content

ராம் பட பாணியில் தாயின் பிரேதத்துடன் இரண்டு நாள் உறங்கிய மகன்... கொலையா? விபத்தா? போலீஸ் விசாரணை...!

Published on 08/02/2020 | Edited on 08/02/2020

பாசத்தின் மிகுதியால் இறந்த தாயின் பிரேதத்துடன் மகன் உறங்குவதைப் போன்று ராம் திரைப்படத்தில் சித்தரிக்கப்பட்டிருக்கும். கனவுத் தொழிற்சாலையில் உருவான இந்தக் கதை, நிஜத்தில் நெல்லையில் நடந்திருப்பது பீதியை கிளப்பியுள்ளது. 

 

Tirunelveli incident- Son slept with dead mother - Ram movie

 



பாளை சமாதனபுரத்திலிருப்பவர் வானமாலை. இவரின் மனைவி விமலா. இவரது வீட்டில் வாடகைக்கு குடியிருப்பவர்கள் வழக்கம் போன்று வாடகை கொடுக்க வரும் போது விமலாவின் வீடு பூட்டி இருந்தது. அது மட்டும் இல்லாமல் வீட்டிலிருந்து அழுகிய வாடை வீசியுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்தவர்கள் வீட்டிற்குள் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்த போது தலையில் ரத்தக் காயங்களுடன் விமலா பிணமாகக் கிடந்திருக்கிறார். அருகில் அவரது இரண்டாவது மகன் அகிலன் (48) எதுவுமே தெரியாதவாறு அப்பாவி போல் சேரில் அமர்ந்திருந்தாராம்.

பின்னர் இது குறித்து அப்பகுதி மக்கள் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பாளை ஏ.சி. பெரியசாமி, இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். ஃப்ரான்சிக் எனப்படும் தடயவியல் துறையினரும் ஆய்வு நடத்த வழக்கு 174 என்கிற செக்‌ஷனில் பதிவானது.

 



இது குறித்து போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், கணவர் வானுமாலை ரயில்வேயில் வேலை பார்த்தபோது சில ஆண்டுகளில் மரணமடைய வாரிசு அடிப்படையில் அந்த வேலை மூத்த மகனுக்குக் கிடைத்தது. பின் அவர் சில ஆண்டுகளில் இறந்து விட தொடர் வாரிசாக விமலாவின் 2 வது மகன் அகிலனுக்கு (47) கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்னர் வேலை கிடைத்திருக்கிறது. 11 ஆண்டுகளுக்கு முன்பே அகிலன் திருமணம் நடந்தது. ஆனால் அகிலனுக்கு மனநல கோளாறு இருப்பதை மறைத்து திருமணம் செய்து வைத்த மனைவி அவரிடமிருந்து விவாகரத்து வாங்கிச் சென்று விட்டார். 

பின்னர் அவனுக்கு 2வது திருமணம் செய்து வைக்க, அவரும் விஷயமறிந்து பிரிந்து போனார். விடாப்பிடியாக விக்கிரமாத்தித்தன் முயற்சியில் 3ம் திருமணம் செய்து வைத்தார் தாய். காரணம் அகிலனின் அனத்தல் தாங்க முடியவில்லையாம். விதி, விஷயமறிந்த 3வது மனைவியும் விட்டால் போதும் என்று பறந்து விட்டாராம். இதன் காரணமாக சிறிதளவு பாதிக்கப்பட்டிருந்த அகிலனின் மனநிலை பாதிப்பு, கூடுதலாக ரயில்வே துறை அவரை சஸ்பெண்ட் செய்திருக்கிறது.

 



இந்த நிலையில் தன் தாயுடன் வசித்து வந்த அகிலன் மீண்டும் தனக்குத் திருமணம் செய்து வைக்கும்படி தாய் விமலாவை நச்சரித்திருக்கிறானாம். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் முற்றியிருக்கிறது. கல்யாணப் பைத்தியம் பிடித்துப் போன அகிலன், கம்பியால் தன் தாயின் மண்டையில் ஒங்கி அடிக்க மண்டை பிளந்து ரத்த வெள்ளத்தில் மடிந்திருக்கிறார் விமலா. இதில் அகிலனின் வலது கையில் காயம் ஏற்பட அதற்கு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கட்டும் போட்டுள்ளான். வழக்கமாகக் கதவைப் பூட்டி விட்டு ஹோட்டலில் சாப்பிடு விட்டு வீடு வந்தவன் எதுவும் நடக்காதது போல் தன்னுடைய அன்றாட வேலையைக் கவனித்திருக்கிறான். பிரேதம் கிடந்த வீட்டிலுள்ள அடுத்த அறையில் படுத்து உறங்கியிருக்கிறான். இரண்டு நாட்கள் இப்படி நடத்திருக்கிறது என தெரியவந்துள்ளது.  

ஆனால் மனநிலம் பாதிக்கப்பட்ட அகிலனோ, அம்மா கீழே விழுந்து இறந்துவிட்டார் என்று பித்து பிடித்தவன் போல கூறிவருகிறான். அவனுக்கு இயல்பிலேயே மனநிலை பாதிப்பா. அதற்கு அவன் சிகிச்சை எடுத்தானா? என்று விசாரணை நடக்கிறது. மேலும் உடற்கூறு அறிக்கை வந்த பிறகே கொலையா?. அவர் கீழே விழுந்ததில் அடியா என்று தெரியவரும் என்கிறனர் விசாரணை அதிகாரிகள். விசாரணையின் முடிவில் இவன் கல்யாணப் பைத்தியமா?. காரியப் பைத்தியமா? என்பது தெரியவரும். 

 
 

சார்ந்த செய்திகள்