தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும் தங்களது சொத்து விவரங்களை சமர்ப்பிக்க உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு தலைமைச் செயலாளர் இறையன்பு கடிதம் மூலமாக இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அனைத்துத்துறை செயலாளர்கள் மற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் வரும் ஜனவரி மாதம் 31ஆம் தேதிக்குள் சொத்து விவரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஏற்கனவே இருக்கும் நடைமுறைகளில் ஒன்றுதான் 1968 இந்திய ஆட்சிப் பணியாளர்கள் சட்டத்தின் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை சுமார் 400க்கும் மேற்பட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் உள்ளனர். சரியான காரணங்கள் இன்றி சொத்து விவரங்களை சமர்ப்பிக்காமல் இருக்கும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் தங்களது குடும்ப உறுப்பினர்களின் சொத்து விவரங்களையும் சமர்ப்பிக்க வேண்டும். எனவே ஜனவரி 31ஆம் தேதிக்குள் ஆன்லைனில் சொத்துவிவரங்ளை சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த அக்டோபர் மாதம் இதேபோல் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் தங்கள் சொத்து விவரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் எனத் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தகுந்தது.