Skip to main content

''தீர்ப்பாயங்களில் போதிய நிபுணத்துவம் இல்லாத ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்'' - நீதிமன்றம் அதிருப்தி!  

Published on 16/04/2021 | Edited on 16/04/2021

 

' IAS officers lacking expertise in tribunals '' - Court dissatisfied!

 

தென்மண்டல பசுமை தீர்ப்பாய நிபுணத்துவ உறுப்பினராக முன்னாள் தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் 19ஆம் தேதி பதவியேற்க இருந்த நிலையில், அவரது நியமனத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 9 ஆம் தேதி  இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.

 

‘சுற்றுச்சூழல் சார்ந்த நிர்வாகத்தில் போதிய அனுபவம் இல்லாதவர் கிரிஜா வைத்தியநாதன். எனவே அவரை அந்தப் பொறுப்பில் நியமிக்க தடை விதிக்க வேண்டும்’ என பூவுலகின் நண்பர்கள் அமைப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கில், கிரிஜா வைத்தியநாதன் பசுமை தீர்ப்பாய நிபுணத்துவ உறுப்பினராக பதவியேற்க இடைக்கால தடை விதித்து, கடந்த 9ஆம் தேதி நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அடுத்த அமர்வில் இதுகுறித்து மத்திய, மாநில அரசுகள் ஆவணங்களை சமர்ப்பித்து பதிலளிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

 

' IAS officers lacking expertise in tribunals '' - Court dissatisfied!

 

இந்நிலையில், அந்த வழக்கு இன்று (16.04.2021) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது தீர்ப்பாயங்களில் போதிய நிபுணத்துவம் இல்லாத ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமிக்கப்படுவதாக நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். மேலும், இந்த வழக்கு தொடர்பாக ஆவணங்களை சமர்ப்பிப்பதற்கு அவகாசம் கேட்டதற்கும் அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், வழக்கை வரும் திங்கள்கிழமைக்கு ஒத்திவைத்து, அதற்குள் ஆவணங்களை சமர்ப்பிக்க உத்தரவிட்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்