ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த கூலித் தொழிலாளி ஒருவர் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே, மேலிருப்பு கிராமத்தை சேர்ந்தவர் தமிழ்குமார். கூலித் தொழிலாளியான இவர் ஆன்லைன் ரம்மி விளையாடி, பல லட்சம் இழந்துள்ளார். இதனால் ஏற்பட்ட மன உளைச்சலின் காரணமாக, தமிழ்குமார் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். தகவல் அறிந்து தமிழ்குமாரை மீட்ட உறவினர்கள் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் தமிழ்குமாரை சேர்த்தனர். மருத்துவமனையில் தமிழ்குமார் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
முன்னதாக அவர் தன் மனைவிக்கு வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருந்ததாவது, “ஆன்லைன் ரம்மியால் பல லட்சம் பணத்தை விட்டு எவ்வளவோ ஏமாந்து விட்டேன். என் குடும்பம் என்னால் நடுத்தெருவிற்கு வந்துவிடும். நான் என் உயிரை மாய்த்துக் கொள்கிறேன். என் மனைவி சிவரஞ்சனி... நான் உன்ன விட்டுப் போறேன். பசங்களை பார்த்துக்கொள். இதற்கு மேல் நான் உயிரோடு இருக்க மாட்டேன். நான் உன்ன ரொம்ப கஷ்டப்பட மாட்டேன். ஆன்லைன் ரம்மியால் என் வாழ்க்கையே போய்விட்டது. அனைத்துக் கட்சித் தலைவர்களும் இது குறித்து போராட்டம் பண்ணுங்கள்” என்றார்.