Skip to main content

"நீட் விலக்கு கோரிக்கையை அழுத்தமாக முன் வைத்தேன்"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி!

Published on 31/03/2022 | Edited on 31/03/2022

 

"I put pressure on the need exemption demand" - Interview with Chief Minister MK Stalin!

 

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய சாலைப் போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி உள்ளிட்டோரைச் சந்தித்த நிலையில், இன்று (31/03/2022) மாலை 06.30 மணிக்கு தமிழ்நாடு இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது, "முதலமைச்சராகப் பதவியேற்ற பின் எனது மூன்றாவது டெல்லி பயணம் இது. உடனடியாக நேரம் ஒதுக்கி என்னை சந்தித்த பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி. மொத்தம் 14 கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமரிடம் நான் அளித்துள்ளேன். கோரிக்கைகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக, பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார். 

 

பிரதமர் உடனான சந்திப்பு மகிழ்ச்சி தருவதாகவும், மன நிறைவு அளிப்பதாகவும் அமைந்திருந்தது. இலங்கையில் தமிழர்களுக்கு சம உரிமை கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் முன் வைத்தேன். காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணைக்கட்ட கர்நாடகாவுக்கு அனுமதி அளிக்கக் கூடாது என்றும் வலியுறுத்தினேன். நீட் தேர்வு தொடர்பான பிரச்சனையை பிரதமர், உள்துறை அமைச்சரிடம் அழுத்தத்துடன் பதிவு செய்தேன். வெள்ள நிவாரண நிதியை உடனே வழங்க வேண்டும் என அமித்ஷாவிடம் வலியுறுத்தினேன். 

 

தமிழ்நாட்டில் டிஆர்டிஓ ஆய்வுக்கூடம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தினேன். தமிழகத்தின் புதிய விமான நிலையம் அமைக்க மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் வலியுறுத்தினேன். சென்னை மதுரவாயல் சாலையை ஸ்ரீபெரும்புதூர் வரை நீட்டிக்க மத்திய அமைச்சரிடம் வலியுறுத்தப்பட்டது. தாம்பரம்- செங்கல்பட்டு இடையே உயர்மட்ட மேம்பாலம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தேன். 

 

டெல்லி அரசுப் பள்ளிகளை முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுடன் இணைந்து பார்வையிடவுள்ளேன். மத்திய அமைச்சர்களுடனான சந்திப்பு திருப்திகரமாக அமைந்தது. நீட் விலக்கு மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்பாமல், ஆளுநர் காலம் தாழ்த்துவதை சுட்டிக்காட்டினேன். மேகதாது அணை விவகாரத்தில் நியாயமான நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் உறுதி அளித்தார்". இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். 


 

சார்ந்த செய்திகள்