கலைஞர் நூற்றாண்டை ஒட்டி 'தமிழ் திரை உலகத்தின் பார்வையில் கலைஞர்' என்ற தலைப்பில் ரஜினிகாந்த் கட்டுரை எழுதியுள்ளார்.
அந்த கட்டுரையில், 'கலைஞரின் இதயத்தில் எனக்கு என்றும் தனி இடம் இருந்தது. கலைஞரின் வாழ்க்கை ஒரு சிறந்த புத்தகம். எஸ்.பி.முத்துராமன் கலைஞரைப் பற்றி நிறைய தகவல்களை எனக்கு கூறியுள்ளார். எஸ்.பி.முத்துராமன் கலைஞரைப் பற்றி கூறிய போது கலைஞர் மீது இருந்த மதிப்பும் மரியாதையும் எனக்கு அதிகமானது. எம்ஜிஆர், சிவாஜி ஆகியோர் புகழின் உச்சிக்குச் செல்ல முக்கிய காரணமாக இருந்தவர் கலைஞர். அவர் எழுதிய பராசக்தி பட வசனங்களை பேசி ஒரே நாளில் சிவாஜி உச்ச நட்சத்திரம் ஆனார்.
எம்.ஜி.ஆருக்காக மருதநாட்டு இளவரசி, மந்திரிகுமாரி, மலைக்கள்ளனுக்கு வசனம் எழுதி வெற்றி படங்களாக்கினார், கலைஞர் 1977-ஆம் ஆண்டு காரில் மியூசிக் அகாடமி பகுதியில் சென்று கொண்டிருந்தேன். பின்னால் ஒரு வாகனம் வந்தது. கண்ணில் கருப்பு கண்ணாடி கலைஞர் என தெரிந்து வழி விட்டேன். எனது காரை கடக்கும் போது கலைஞர் என்னைப் பார்த்து அன்புடன் சிரித்து கைகளை ஆட்டினார். என்னை பார்த்து அன்புடன் சிரித்த அந்த சிரிப்பு என் வாழ்க்கையில் மறக்க முடியாதது. அதுதான் கலைஞரை முதன் முதலில் நான் பார்த்தது' என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.