Skip to main content

"சமஸ்கிருதத்தில் இருந்து தமிழுக்கு பல்வேறு சொற்கள் வந்துள்ளன" - ஆளுநர் ஆர்.என்.ரவி

Published on 13/05/2023 | Edited on 13/05/2023

 

 governor rn ravi tamil and sanskrit language related answer

 

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள், குடிமைப் பணிக்குத் தேர்வாகி வரும் போட்டித் தேர்வர்கள் மற்றும் குடிமைப் பணி தேர்வில் தேர்ச்சி பெற்று பயிற்சியில் உள்ள இளம் அதிகாரிகளை ஆளுநர் மாளிகையில் சந்தித்து அவ்வப்போது உரையாடி வருகிறார். மேலும் அவர்கள் எழுப்பும் கேள்விகளுக்கும் பதிலளித்து வருகிறார்.

 

அந்த வகையில் நேற்று (12.05.2023) ‘ஒரே பாரதம் உன்னத பாரதம்’ என்ற மத்திய அரசின் திட்டத்தின் கீழ் பீகாரில் இருந்து தமிழகம் வந்த மாணவர்கள் சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர்  ஆர்.ஏன்.ரவியை சந்தித்து உரையாடினார். இந்த உரையாடலின் போது மாணவர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு ஆளுநர் பதிலளித்து பேசுகையில், "பாரதம் என்பது 1947 ஆம் ஆண்டு உருவாக்கப்படவில்லை. 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பாரதம் உருவாகிவிட்டது.

 

தமிழ் மற்றும் சமஸ்கிருதம் ஆகிய இரு மொழிகளையும் பழமையான மொழிகள் என்று கூறுவார்கள். இந்த இரு மொழிகளில் பழமையான மொழி எது என்பதற்கு தற்போது போது வரை உரிய விளக்கம் கிடைக்காமலேயே உள்ளது. இதன் மூலம் பழமையான மொழி சமஸ்கிருதமா அல்லது தமிழா என்ற விவாதம் இருந்து கொண்டே தான் இருக்கிறது. மேலும், தமிழ் மொழியில் இருந்து சமஸ்கிருதத்துக்கு பல சொற்கள் வந்துள்ளன. அதே போன்று சமஸ்கிருதத்தில் இருந்து தமிழுக்கும் பல்வேறு சொற்கள் வந்துள்ளன" என்றார்.

 

மேலும் மற்றொரு கேள்விக்கு விளக்கமளிக்கையில், "நான் இளம் வயதிலேயே திருமணம் செய்துகொண்டேன். எனது திருமணம் ஒரு குழந்தை திருமணமாகும். எனது மனைவி கல்லூரிக்கு சென்று படிக்கவில்லை. இருப்பினும் வாழ்க்கையில் எனக்கு பக்கபலமாக இருந்தார். நான் உலகத்தையே எதிர்க்கும் திறனை எனது மனைவி எனக்கு அளித்தார். நான் எப்போது வீடு திரும்பினாலும் எனக்கு பக்கபலமாக இருந்தார். அதுபோல குடும்பத்தினர் நம் பக்கம் இருந்தால் நம்மால் நிச்சயம் சாதிக்க முடியும்" எனப் பேசினார். 

 

 

சார்ந்த செய்திகள்