Skip to main content

ஆடியோ சர்ச்சையும்... கலெக்டரின் விளக்கமும்... 

Published on 05/11/2019 | Edited on 05/11/2019

கரூர் மாவட்டம் செம்பியநத்தம் கிராமத்தில் இருந்து ஒருவர் மாவட்ட ஆட்சியர் அன்பழகனிடம் தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு எங்களது பகுதியில் ஆழ்துளை கிணறு மூடப்படாமல் இருக்கிறது என்று தகவல் கூறியதாகவும், அந்த பகுதி வட்டார வளர்ச்சி அலுவலரிடம் தகவல் அளித்தும் ஆழ்துளை கிணறு மூடப்படாததால்தான் உங்களிடம் தகவல் சொல்வதாகவும் கூறியிருக்கிறார். அதற்கு மாவட்ட ஆட்சியர் ''கலெக்டர் என்றால் சரவணபவன் ஹோட்டல் சப்ளையர் என்று நினைத்து விட்டீர்களா? பிளடி ராஸ்கல் போன வை'' என்று கூறி போனை துண்டித்ததாக ஆடியோ ஒன்று வெளியானது.

 

"I am not speaking ... it is not my voice" - District Collector

 

இந்த ஆடியோ சமூகவலைதளங்களில் பரவி கரூரில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் செம்பியநத்தம் கிராமத்தை சேர்ந்த இளைஞரிடம் நான் பேசவில்லை என்றும், அந்த ஆடியோவில் உள்ளது எனது குரல் இல்லை என்றும் கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகன் விளக்கம் அளித்துள்ளார்.

 

 

 

சார்ந்த செய்திகள்