திருச்சி மாவட்டம், சமயபுரம் நரசிங்கமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். இவருக்கு கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு சுதா என்பவருடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில், கணவன் மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு நடைபெற்று வந்துள்ளது. இதில் கணவர் கார்த்திகேயனுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக அறிந்த மனைவி சுதா நேற்று அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அந்த தகராறுக்கு பிறகு இரவு கார்த்திகேயன் உறங்கிக்கொண்டிருந்த போது, அவரது மனைவி தண்ணீரை கொதிக்க வைத்து உடல் முழுவதும் ஊற்றி உள்ளார்.
இதில் கார்த்திகேயன் உடல் முழுவதும் காயங்கள் ஏற்பட்டிருக்கிறது. அவரின் அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் அவர் வீட்டிற்கு வந்து அவரை மீட்டு மண்ணச்சநல்லூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இச்சம்பவம் குறித்து அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் சுதாவின் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.