Published on 22/10/2018 | Edited on 22/10/2018

பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா இன்று (22.10.2018) காலை சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வந்தார்.
புதுக்கோட்டை விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின்போது உயர்நீதிமன்றத்தையும், காவல்துறையையும் தரக்குறைவாகவும், அவதூறாகவும் பேசியதாக, நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.
இந்த நிலையில் எச்.ராஜா இன்று (22.10.2018) காலை சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வந்தார். காலை 10 மணி அளவில் நீதிபதி சி.டி. செல்வம், நிர்மல்குமார் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு ஆஜராவார் என தெரிகிறது.