Skip to main content

“கிலோ ஒரு ரூபாய் எப்படி கட்டுப்படி ஆகும்” - வெண்டைக்காயை சாலையில் கொட்டி விவசாயிகள் போராட்டம்

Published on 04/09/2023 | Edited on 04/09/2023

 

n

 

கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டக்கூடாது மற்றும் தமிழகத்திற்கான நீரைத் திறந்து விட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் விவசாயிகள் 39வது நாளாக பல்வேறு வகைகளில் போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர்.

 

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், திருச்சி மேல் சிந்தாமணி பகுதியில் வெண்டைக்காய்களை சாலையில் கொட்டி இன்று விவசாயிகள் போராட்டம் நடத்தினர். வெண்டைக்காயின் விலை இரண்டு நாட்களாகவே கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. குறிப்பாக ஒரு கிலோ வெண்டைக்காய் ஒரு ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெண்டைக்காயை அறுவடை செய்வதற்கு இரண்டு ரூபாய் செலவாகும் நிலையில் ஒரு கிலோ வெண்டைக்காயை ஒரு ரூபாய்க்கு விற்பது என்பது விவசாயிகளுக்கு கடும் பாதிப்பை நஷ்டத்தை ஏற்படுத்துகிறது. மத்திய, மாநில அரசுகள் காய்கறி, பூக்கள் அதிகம் விளையும் பகுதிகளில் குளிர் பதன கிடங்குகளை அமைக்க வேண்டும் என ஏற்கனவே கோரிக்கைகள் வைக்கப்பட்டும் நிறைவேற்றப்படவில்லை எனப் போராட்டம் நடைபெற்றது. போலீசார் அவர்களை தடுத்து நிறுத்த முயன்றும் விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

 

 

சார்ந்த செய்திகள்