Skip to main content

பாத்ரூமில்... ஐயோ... நடு நடுங்கிய பெண்..!

Published on 10/09/2020 | Edited on 10/09/2020

 

8888

 

பாத்ரூம் பயங்கரத்தைக் கண்டு நடுநடுங்கிப் போனார் அந்தப் பெண்..! ஆமாம் அவர் கண்டது குலை நடுங்கும் காட்சியாச்சே..!

 

ஈரோட்டில் முத்தம்பாளையம் என்ற பகுதியில் வீட்டு வசதி வாரிய குடியிருப்புகள் உள்ளது. இதில், வசித்துவந்த ஒருவரின் மனைவி குளிப்பதற்காக துணிகளை எடுத்துக் கொண்டு வீட்டுக்கு வெளியே இருந்த குளியலறைக்குள் சென்று கதவை மூடினார். பிறகு அவர் குளிக்க தயாரானபோது அங்கு கண்ட காட்சியைப் பார்த்து ஐயோ என பெருங்கூச்சலிட்டார். வீட்டிலிருந்த கணவர் குளியலறை நோக்கி ஓடிச் சென்றார். பிறகு அவர் மனைவியைப் பாதுகாப்பாக வெளியே கொண்டு வந்தார்.

 

ஆமாம் அந்தக் குளியலறைக்குள் மூன்று பாம்புகள் இருந்துள்ளது. இதைப் பார்த்து தான் அந்தப் பெண் கூச்சல் போட்டுள்ளார். உள்ளே பாம்புகள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவரின் கணவர், பாம்புகள் வெளியே வராதவாறு பாத்ரூம் கதவைப் பூட்டினார். பிறகு அருகே வசிப்பர்களிடம் தகவல் சொல்ல "ஐயோ பாம்பு அதுவும் மூன்று பாம்புகள்" என பாத்ரூம் கதவைத் திறக்க பலரும் அஞ்சினர். 

 

பிறகு ஈரோடு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் அந்த இடத்திற்கு வந்து குளியல் அறையைத் திறந்து பார்த்தனர் அங்கு சுவர் ஒரம் பதுங்கி இருந்த மூன்று பாம்புகளையும் மீட்டு வெளியே கொண்டு வந்தனர். அந்த மூன்று பாம்புகளும் கொடிய விஷத்தன்மை கொண்ட சாரைப் பாம்புகள் எனக் கூறினார்கள். 

 

ஒவ்வொன்றும் 3 அடி முதல் 4 அடி வரை இருந்துள்ளது. இரவிலோ அல்லது விடியற்காலை நேரத்திலோ ஒன்றன் பின் ஒன்றாக மூன்று பாம்புகளும் மெல்ல திறந்திருந்த பாத்ரூம் அறைக்குள் வந்து மூன்றும் ஒன்றோடு ஒன்று இணைந்து விளையாடியிருக்கிறது. நல்லவேளை குளிக்கும் முன்பே அந்தப் பெண் பாம்புகளை பார்த்துவிட்டதால் உயிர் தப்பமுடிந்திருக்கிறது.

 

Ad

 

பிறகு தீயனைப்பு வீரர்கள் அந்த பாம்புகளை வனப்பகுதியில் விடுவதற்கு கொண்டு சென்றனர். இந்தச் சம்பவத்தால் அப்பகுதியில் பெரியளவில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த பழனிசாமி வீட்டின் அருகில் குடியிருக்கும் மற்ற குடியிருப்புவாசிகளும் பெரும் பீதியுடன்தான் உள்ளார்கள். ஏனெனில் இந்தப் பகுதியில் ஏராளமான முட்புதர்கள் இருக்கிறது. அவைகள்தான் பாம்புகளின் வாழ்விடமாக உள்ளது. இவற்றை அகற்றி அந்தப் பகுதியைச் சுத்தம் செய்தால்தான் அங்கு வாழும் மக்களுக்கு நிம்மதி.

 

 

 

சார்ந்த செய்திகள்