மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் முறைகேடுகள் நடந்து நிதி கையாடல் செய்யப்பட்டுள்ளதை இளைஞர்கள் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் தகல்களை பெற்று ஆதாரங்களுடன் புகார்களை கொடுத்து வருகின்றனர். கிராம சபை கூட்டங்களிலும் இது சம்மந்தமாக கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
இந்த நிலையில் தான் தஞ்சை மாவட்டத்தில் மட்டும் கடந்த 3 ஆண்டுகளில் நூறு நாள் வேலை திட்டத்தில் ரூ 210 கோடியே 26 லட்சத்தி 20 ஆயிரத்தி 959 ரூபாய் நிதி மோசடி செய்யப்பட்டுள்ளதாக சமூகத் தணிக்கை மூலம் ஆதாரங்களைப் பெற்று அனைத்து ஆதாரங்களுடனும் மாவட்ட ஆட்சியரிடம் மனுவோடு ஆதாரங்கள் அடங்கிய கோப்பையும் இணைத்து தஞ்சை மாவட்டம் பத்துரூபாய் இயக்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் காந்தராவ்ராசு தலைமையிலான குழுவினர் புகார் மனு கொடுத்துள்ளனர்.
மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் உரிய விசாரனைக்கு பிறகு நடவடிக்கைாஎடுப்பதாக உறுதி அளித்துள்ளார். ஒரு மாவட்டத்தில் மட்டும் ரூ 210 கோடி என்றால் தமிழ்நாடு முழுவது எத்தனை ஆயிரம் கோடிகள் நிதி மோசடி செய்யப்பட்டிருக்கும்? என கேள்வி எழுப்புகின்றனர் பொதுமக்கள்...