மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் பல்வேறு அரசு துறைகள் இணைய தள மிண்ணணு சேவைக்கு மாறியுள்ளனர். மேலும் டிஜிட்டல் இந்தியாவில் முக்கிய பங்கை வகிப்பது "National Informatics Centre" நிறுவனம் ஆகும். இந்நிறுவனம் அரசுக்கு தேவையான இணையதள பக்கங்களை உருவாக்கித் தருவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதன்படி தமிழகத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர்களிடம் இணைய தளம் மூலமாக பொதுமக்கள் மனு அளிக்கும் வகையில் இதற்கென இணைய தள பக்கங்களை உருவாக்கியுள்ளது " National Informatics Centre". இந்நிறுவனம் மத்திய தகவல் மற்றும் தொழில்நுட்ப துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.இந்த இணைய தள பக்கத்தின் முகவரி : gdp.tn.gov.in ஆகும். இதில் பொதுமக்கள் , ஓய்வூதியதாரர்கள், விவசாயிகள் என அனைவரும் தங்கள் வீட்டிலிருந்தவாரே இணையதளம் மூலமாக மாவட்ட ஆட்சியர்களுக்கு மனு அளிக்கலாம்.
மனுதாரர் இந்த இணையதள பக்கத்திற்கு சென்று முதலில் தங்கள் தொலைபேசி எண்ணை மனுதாரர் பதிவிட வேண்டும்.பின்பு அந்த தொலைபேசி எண்ணிற்கு குறுந்தகவல் வரும். இதில் ரகசிய குறியீட்டு எண்கள் இடம் பெற்றிருக்கும். இந்த எண்ணை பதிவிட்டால் மட்டுமே உள்ளே (Login) நுழைய முடியும். பின்பு தங்கள் பெயர் , முகவரி , மாவட்டம் , எந்த துறை சமந்தமாக மனு செய்ய உள்ளோம் என்பதை குறிப்பிட வேண்டும். அதன் பிறகு மனுதாரர் மனு தொடர்பான முழு விபரங்களை தமிழ் ( அல்லது ) ஆங்கிலத்தில் டைப் செய்ய வேண்டும். தாங்கள் அளிக்கும் மனு சம்பந்தப்பட்ட ஆவணங்கள் ஏதேனும் இருந்தால் இந்த மனுவோடு பதிவேற்றம் செய்யலாம். இதன் பிறகு "SUBMIT" என்ற Option - யை கிளிக் செய்ய வேண்டும். பின்பு பதிவு செய்யப்பட்ட தொலைப்பேசி எண்ணுக்கு ஒரு குறுந்தகவல் வரும். இதில் மாவட்ட ஆட்சியருக்கு மனு அளித்ததற்கான "Acknowledgement No" இடம்பெற்றிருக்கும்.இந்த எண்ணை பயன்படுத்தி மனுதாரர் தான் அளித்த மனுவின் தற்போதைய நிலையை அறிலாம்.
மனுவின் நிலையை அறிய இரண்டு வழிமுறைகள் உள்ளன். இதில் ஒன்று குறுந்தகவல் மூலம் "Acknowledgement No" யை டைப் செய்து "155250" என்ற எண்ணுக்கு குறுந்தகவல் அனுப்ப வேண்டும். இந்த சேவை முற்றிலும் இலவசமாகும். இதன் பிறகு மனுவின் நிலை பற்றி குறுந்தகவல் வரும் (அல்லது) gdp.tn.gov.in என்ற இணைய தளப்பக்கத்திற்கு சென்று "Petition Status" என்ற Option இடம்பெற்றிருக்கும். இதில் மனுதாரரிடம் உள்ள "Acknowledgement No" பதிவிட்டு "Submit" செய்ய வேண்டும். பின்பு மனுவின் நிலையை அறியலாம் மற்றும் பதிவிறக்கம் செய்யும் வசதியும் உண்டு. இந்த இணைய தள சேவை என்பது முதியோர்கள் மற்றும் பொதுமக்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருக்கும். எனவே படித்த இளைஞர்கள் இந்த சேவையை பொதுமக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். பொதுமக்கள் மற்றும் முதியோர்களுக்கு இணையதள சேவையை பயன்படுத்தி மனு அளித்து உதவிட இளைஞர்கள் முன்வர வேண்டும் என்பது அனைவரின் கருத்தாக உள்ளது.
பி . சந்தோஷ் , சேலம்