![Hindi in government school test](http://image.nakkheeran.in/cdn/farfuture/JQMJBLZN2XTxyRK9VkT8qOIc0jvt5EKUUS2ejQCsDB0/1601656343/sites/default/files/inline-images/kkv.jpg)
காந்தி ஜெயந்தி முன்னிட்டு மாணவர்களுக்கு புதிர் போட்டி அக்டோபர் 2ஆம் தேதி நடைபெறும் என்றும் இப்போட்டி மூன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்புவரை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
மேலும், போட்டித் தேர்வை ஆன்லைன் மூலமாகவே எழுதவேண்டும் என்று மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் முதன்மை கல்வி அலுவலர் மூலமாக மாவட்டம் முழுவதும் உள்ள அரசு பள்ளி தலைமை ஆசியர்களுக்கு அதுதொடர்பான கடிதம் அனுப்பிவைக்கப்பட்டது.
இந்தக் கடிதத்தில் முக்கிய குறிப்பாக அப்போட்டி ஆங்கில் மற்றும் இந்தியில் தான் நடைபெரும் என்று குறிப்பிட்டு இருந்தனர். அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு தமிழ் அல்லது ஆங்கிலம் என்று அறிவித்திருந்தால் கூட பரவாயில்லை, இந்தியை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக பொதுக் குழு கூட்டத்தில் கொண்டுவந்த இரு மொழி கொள்கை இதுதானா என்று அனைவரின் மத்தியிலும் கேள்வி எழுந்துள்ளது. தேர்வு மட்டும் ஆங்கிலம் அல்லது இந்தியில் நடைபெறும். ஆனால், அறிக்கை மட்டும் தமிழில்தான் விடுவோம். இதுதான்யா இந்த ஆட்சி என்கிறார்கள் பொதுமக்கள்.