Skip to main content

தமிழக மக்கள் தங்கள் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் முழு விவரங்களை அறிய வேண்டுமா ?

Published on 28/03/2019 | Edited on 28/03/2019

தமிழகத்தில் 40 மக்களவை தொகுதிகளுக்கும் , 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 18 ஆம் தேதி தேர்தல் நடைப்பெற உள்ளது. இந்நிலையில் வேட்பு மனு மீதான பரிசீலனை முடிவடைந்துள்ளது. எனவே  மக்கள் அனைவரும் தங்கள் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் சொத்து விவரங்கள் மற்றும் மற்ற விவரங்களை தமிழ்நாடு தேர்தல் ஆணையம் (Tamilnadu Election Commission) இணையதளம் மூலம்  அறிந்துக்கொள்ளலாம்.

இதற்கான இணைய தள முகவரி : http://www.elections.tn.gov.in/vote/index.aspx மற்றும் http://ecapp0155.southindia.cloudapp.azure.com/pcnom/pu_nom/public_report.aspx?eid=PY12019 இந்த இணையதளத்தை  பயன்படுத்தி மக்கள் வீட்டிலிருந்தவாறே அறிந்து கொள்ளலாம். இதில் தங்கள் தொகுதியின் பெயரை தேர்வு செய்தால் போதும் எத்தனை கட்சி வேட்பாளர்கள் நமது தொகுதியில் போட்டியிடுகிறார்கள் என்பதை அறிந்து கொள்ளலாம். பின்பு கட்சியின் பெயரை தேர்வு செய்தால் வேட்பாளரின் பெயர் மற்றும் சொத்து விவரங்கள் (Affidavit)  மற்றும் மனுதாக்கல் (Nomination Paper) விவரங்கள் இடம் பெற்றிருக்கும். இதனை மக்கள் எளிதாக ஒவ்வொரு வேட்பாளர்களின் விவரங்களையும் , வீட்டிலிருந்தே அறியலாம்.


பி .சந்தோஷ் , சேலம் .

சார்ந்த செய்திகள்