தமிழகப் பகுதிகளில் மேல் காற்று திசையின் போக்கு மாற்றம் அடைந்திருப்பதால் மழை தரக்கூடிய சாதகமான சூழ்நிலை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் தமிழகத்தின் பல பகுதிகளில் மழை தொடங்கியுள்ளது.
அக்டோபர் எட்டாம் தேதி வரை தமிழகத்தில் பரவலாக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக ராணிப்பேட்டை, கோவை, திருப்பத்தூர், வேலூர், கிருஷ்ணகிரி, சேலம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, தர்மபுரி, தேனி, நீலகிரி, திண்டுக்கல், ஈரோடு, திருப்பத்தூர் ஆகிய 14 மாவட்டங்களில் இன்று (03/10/2024) கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை (04/10/2024) புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி ஆகிய 17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்.6 மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 25 மாவட்டங்களிலும், அக்.7 கடலூர், அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட 14 மாவட்டங்களிலும் என அக்.8 ஆம் தேதி வரை தமிழகத்தில் பரவலாக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரையில் 48 மணி நேரத்தில் இடிமின்னடலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும். அதிகபட்சமாக 35 லிருந்து 36 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயரக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.