தமிழகத்தில் 30 மாவட்டங்களில் இரவு 8 மணி வரை பரவலாக மழைக்கான வாய்ப்பு இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அறிவிப்பின்படி திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருப்பத்தூர், மதுரை, விருதுநகர், தேனி, கன்னியாகுமரி, சேலம், தென்காசி, கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட 30 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது
சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல இடங்களில் கனமழை பொழிந்து வருகிறது.ஈக்காட்டுதாங்கல், மதுரவாயல், ராமாபுரம், வளசரவாக்கம் ஆகிய பகுதிகளில் கனமழை பொழிந்து வருகிறது. பூந்தமல்லி, திருவேற்காடு, வானகரம், செம்பரம்பாக்கம், குன்றத்தூர், மாங்காடு ஆகிய பகுதிகளிலும் பரவலாக மழை பொழிந்து வருகிறது. சென்னை மாநகரில் சிந்தாதிரிப்பேட்டை, சேப்பாக்கம், ஆயிரம் விளக்கு, பெரம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பொழிந்து வருகிறது.
இந்நிலையில் அடுத்த பத்து நாட்களில் அதி தீவிர மழைக்கு வாய்ப்பு இருக்கும் என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கணித்துள்ளார். அவருடைய அறிவிப்பில் 'அடுத்த பத்து நாட்களில் அதிதீவிர மழையுடன் மிகவும் தீவிரமான புயல் உருவாக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வட சென்னையை தவிர செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் அதி தீவிர மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனவும், மத்திய, மேற்கு மற்றும் தென் சென்னையின் மற்ற அனைத்து பகுதிகளிலும் தீவிர மழை பொழியும் எனவும் பிரதீப் ஜான் கணித்துள்ளார்.