Skip to main content

திமுக எம்.எல்.ஏ.க்களுக்கு அனுப்பப்பட்ட உரிமைக்குழு நோட்டீஸ் ரத்து! -உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு விபரம்!

Published on 26/08/2020 | Edited on 26/08/2020
ch

 

தமிழக சட்டப் பேரவைக்கு திமுக உறுப்பினர்கள் குட்கா கொண்டு சென்றது தொடர்பான உரிமைமீறல் நோட்டீஸுக்கு எதிராக, திமுக எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்த வழக்கில், மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 18 எம்.எல்.ஏ.க்களுக்கு உரிமைக்குழு அனுப்பிய நோட்டீஸை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் ஒரு பகுதி இதோ - 

 

• சபைக்குள் தடை செய்யப்பட்ட பொருளைக் கொண்டுவந்து காட்டிய விவகாரத்தில் அனுப்பப்பட்ட நோட்டீஸ் உள்நோக்கத்துடன் அனுப்பப்பட்டதா என்பதை இந்த வழக்கில் முடிவு செய்ய முடியாது. 

• அரசுக்கு பெரும்பான்மை உள்ளதா,  இல்லையா என்ற விவகாரத்திற்குள் செல்ல நீதிமன்றம் விரும்பவில்லை. 

• தங்கள் தரப்பு கருத்தை தெரிவிக்க வாய்ப்பளிக்கவில்லை என்ற வாதத்தை ஏற்க முடியாது.  இன்னும் அவர்களுக்கு அவகாசம் உள்ளது.

• உரிமைக்குழுவிற்கு சபாநாயகர் இந்த விவகாரத்தை அனுப்பிய பின்னர் நோட்டீஸ் மட்டுமே அனுப்பப்பட்டுள்ளது. இன்னும்  விசாரிக்கவே தொடங்கவில்லை.

•  உரிமையை மீறியுள்ளார்கள் என்ற முகாந்திரத்தின் அடிப்படையிலேயே,  சபாநாயகர் இந்த விவகாரத்தை உரிமைக்குழுவிற்கு அனுப்பி உள்ளாரே தவிர, முன் முடிவுகள் எதுவும் எடுக்கவில்லை.

• உரிமைக்குழுவில் உள்ள அனைவருமே சபாநாயகர் சொன்ன கருத்தின் அடிப்படையில்தான் தெரிவிப்பார்கள் என யூகிக்க முடியாது.

• உரிமை மீறல் பிரச்சினையை முடிவு செய்வது சட்டப்பேரவை அதிகார வரம்பிற்கு உட்பட்டது

• 2017 ஆகஸ்ட் 28 –ல்  அனுப்பப்பட்ட நோட்டீஸ் அடிப்படையில்,  மனுதாரர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாது என்பதால்,  நோட்டீஸ் ரத்து செய்யப்படுகிறது.

• இந்த விவகாரத்தில் உரிமை மீறல் செய்திருக்கிறார்கள் என்று குழு கருதினால், புதிதாக  விசாரணை தொடங்குவது குறித்து உரிமைக்குழு முடிவெடுக்கலாம்

• அப்படி அனுப்பப்பட்டால்,  குழு முன் மனுதாரர்கள் ஆஜராகி, நீதிமன்றத்தில் வைத்த வாதங்களை முன்வைக்கலாம்.

 

 

சார்ந்த செய்திகள்