காற்று திசை வேக மாறுபாட்டின் காரணமாக தமிழகத்தில் சில நாட்களாகவே பரவலாக மழை பொழிந்து வரும் நிலையில் இன்று தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
அறிவிப்பின்படி, கோவை, நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், சேலம் ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது. அதேபோல் திருச்சி, கரூர், நாமக்கல், திண்டுக்கல், தேனி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவை, நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், திருச்சி, கரூர், திண்டுக்கல், மதுரை, தேனியில் நாளைக்கும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வரும் அக்டோபர் 10, 11 ஆகிய நாட்களில் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், சேலம், நாமக்கல், திருச்சி, கரூர், திண்டுக்கல், மதுரை, தேனி உள்ளிட்ட 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையைப் பொறுத்தவரை இரண்டு நாட்களுக்கு ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.