Skip to main content

பவானி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு;வீடுகளில் நீர் புகுந்தது!

Published on 08/08/2019 | Edited on 08/08/2019

ஈரோடு மாவட்டம் பவானி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

 

 Heavy floods in Bhavani river, flooding in houses!

 

பில்லூர் அணையிலிருந்து 62,000 கனஅடி நீர் திறந்துவிடப்பட்டதால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளப்பெருக்கினால் உப்பபள்ளம் என்ற இடத்தில் 50 க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. 

இந்நிலையில் கர்நாடகாவிலுள்ள கபினி அணையிலுருந்து 90 ஆயிரம் கன அடியும், கபினி அருகே உள்ள தாரகா அணையிலிருந்து வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடி  நீரும் என மொத்தம் ஒரு லட்சம் கன அடி நீர் காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது. அதேபோல் கேஎஸ்ஆர் அணையிலிருந்து வினாடிக்கு 421 கனஅடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

கபினி அணைக்கு வரும் நீர் அப்படியே காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டு வருவதால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால்  தமிழகத்தில் காவிரி கரையோர மக்கள் பாதுக்காப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்