Skip to main content

       புதுக்கோட்டையில் அனைத்து அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளின் தலைமையாசிரியர்கள்         ஆய்வுக்கூட்டம்

Published on 07/05/2018 | Edited on 07/05/2018
govt

 

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கு  07-05-2018(திங்கட்கிழமை) அன்று காலையிலும், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு உதவிப்பெறும் பள்ளிகள், மெட்ரிக்பள்ளிகள், சி.பி.எஸ்.இ பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்களுக்கு  அன்று மதியமும் 2017-2018 ஆம் கல்வியாண்டிற்கான முனனேற்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் புதுக்கோட்டை அரசு கல்வியியல் கல்லூரியில் நடைபெற்றது. ஆய்வுக்கூட்டத்திற்கு  புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் இரா.வனஜா தலைமை தாங்கி பேசும்போது கூறியதாவது,  ஒவ்வொரு பள்ளிக்கும் தலைமையாசிரியரின் பணி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். பள்ளியின் தலைமையாசிரியர் ஆசிரியர்களுக்கு சிறப்பான வழிகாட்டலை மேற்கொண்டு பள்ளியின் வளர்ச்சிக்காக ஆசியர்களுடன் இணைந்து  செயல்படும்போது அப்பள்ளியானது சிறப்பான நிலையினை அடையும். வரும் கல்வி ஆண்டில் பள்ளி திறப்பதற்கு முன்பாக தலைமையாசிரியர்கள் ஆசிரியர்களுக்கான கூட்டத்தினையும், பெற்றோர் ஆசிரியர்கழகத்திற்கான கூட்டத்தினையும் நடத்தி பள்ளியின் வளர்ச்சி குறித்து விவாதிக்கவேண்டும். மாணவர்களுக்கு வழங்கவேண்டிய பாடப்புத்தகங்கள் உள்ளிட்ட அரசின் நலத்திட்டங்களை  பள்ளித்திறக்கும் நாளன்றே மாணவர்களுக்கு வழங்கிடவேண்டும். அரசுப்பள்ளிகளின் சிறப்பம்சத்தினை பொதுமக்களிடம் சரியான முறையில்கொண்டு சென்று இந்த கல்வியாண்டில் ஒவ்வொரு அரசுப்பள்ளியிலும் மாணவர்களின் சேர்க்கையினை அதிகரிக்கவேண்டும். 

 

அனைத்து முன்னேற்பாடுகளையும் பள்ளி திறப்பதற்கு முன்பு செய்ய அறிவுறுத்தல். பனிரெண்டு மற்றும் பத்தாம் வகுப்பு அரசுப்பொதுத்தேர்வு முடிவுகள் வெளிவரும் நாளன்றே தேர்வு முடிவினை அறிந்துகொள்வதற்கும், மாணவர்களின் உயர்கல்விக்கு தேவையான அனைத்து சான்றிதழ்கள் கிடைக்கவும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.   பள்ளித்திறப்பதற்கு முன்பாக பள்ளி வளாகத்தூய்மை, குடிநீர்வசதி, கழிப்பறை சுகாதாரம் ஆகியவை சிறப்பாக பராமரிப்பு பணிமேற்கொள்ளவேண்டும். இலவச கட்டாயக்கல்விச்சட்டத்தின்படி மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றதை மெட்ரிக்பள்ளிகள், சி.பி.எஸ்.இ பள்ளிகள் உறுதிசெய்யவேண்டும். குறிப்பாக வரும் கல்வி ஆண்டிற்கான அனைத்து முன்னேற்பாடுகளையும் பள்ளி திறப்பதற்கு முன்பு  தலைமையாசிரியர்கள் செய்யவேண்டும். வரும் கல்வி ஆண்டில் இவ்வாறாக ஒவ்வொரு தலைமையாசிரியரும் சிறப்பாக செயல்பட்டு  கல்வித்துறையில் புதுக்கோட்டை மாவட்டம். தமிழகத்திலேயே முதன்மை மாவட்டமாக வருவதற்கு பாடுபடகேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார். இந்த அய்வுக்கூட்டத்தில் மாவட்டக்கல்வி அலுவலர்கள் புதுக்கோட்டை சாமி.சத்தியமூர்த்தி, அறந்தாங்கி(பொ) கே.திராவிடச்செல்வம், அனைவருக்கும் இடைநிலைக்கல்வித்திட்ட மாவட்ட உதவித்திட்ட ஒருங்கிணைப்பாளர் சி.பழனிவேலு, அனைவருக்கும் கல்வி இயக்க மாவட்ட உதவித்திட்ட ஒருங்கிணைப்பாளர் ஆர்.இரவிச்சந்திரன்,  மவாட்ட உடற்கல்வி ஆய்வாளர்(பொ) ஆர்.தங்கராஜ், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்(இடைநிலைக்கல்வி) ஆர்.கபிலன், பள்ளித்துணை ஆய்வாளர்கள் புதுக்கோட்டை வி.ஆர்.ஜெயராமன், அறந்தாங்கி சி.செல்வம் மற்றும் பலர் கலந்துகொண்டனர். 
 

சார்ந்த செய்திகள்