Published on 20/12/2019 | Edited on 20/12/2019
விழுப்புரம் முத்தாம்பாளையம் கிராமத்தில் மின்மாற்றி டிரான்ஸ்பார்மர் மிகவும் சேதமடைந்துள்ளது. இதனால் அடிக்கடி மின்சாரம் தடை படுகிறது. மேலும் குறைந்த மின்னழுத்தம் வருவதால் அந்த கிராமத்தில் உள்ள மின்சாதன பொருட்கள் சேதமடைந்து விடுகின்றன.

இப்படி மிகவும் அபாயகரமாக உடைந்த நிலையில் இருக்கும் அந்த டிரான்ஸ்பார்மரை, உயிர் விபத்து ஏற்படும் முன் மாற்றித்தருமாறு கிராமத்து பொதுமக்கள் சுமார் 30 பேர் விழுப்புரம் மின் துறை அலுவலகத்திற்கு வந்து மனு கொடுத்தனர். பின்னர் பல முறை மனுக்கள் கொடுத்தும் டிரான்ஸ்பார்மர் மாற்றப்படவில்லை என்று வேதனை தெரிவித்தனர்.