Skip to main content

135 எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளது: எடப்பாடி பழனிசாமி

Published on 06/09/2017 | Edited on 06/09/2017
135 எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளது: எடப்பாடி பழனிசாமி

சபாநாயகர் உள்பட 135 எம்.எல்.ஏக்களும் அ.தி.மு.கவிலேயே நீடிப்பதால் பெரும்பான்மையை இழக்கவில்லை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், 

தமிழக அரசுக்கு மெஜாரிட்டி உள்ளது. பெரும்பான்மையான எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளது. 135 எம்.எல்.ஏ.,க்கள் அரசை ஆதரிக்கின்றனர். எம்எல்ஏக்கள் கூட்டத்தில் 109 பேர் பங்கேற்றனர். சில காரணங்களால் சிலர் பங்கேற்கவில்லை. நாங்கள் பதவியேற்றதில் இருந்து ஸ்டாலின் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். அவரது குற்றச்சாட்டு அனைத்தும் தவறு. தமிழக அரசை பொறுத்தவரை நீட் தேர்வில் முழு விலக்கு வேண்டும் என்று தான் முழு அழுத்தம் தந்தோம். கடைசி வரை போராடினோம். நீட் தேர்வு விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை பின்பற்ற வேண்டிய நிலைக்கு அரசு தள்ளப்பட்டுவிட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

சார்ந்த செய்திகள்