புதிய நிர்வாகிகளை நியமனம் செய்யும் அதிகாரம் தினகரனுக்கு உள்ளது; தங்கதமிழ்செல்வன்
புதிய நிர்வாகிகளை நியமனம் செய்யும் அதிகாரம் தினகரனுக்கு உள்ளது என அதிமுக எம்.எல்.ஏ., தங்கதமிழ்செல்வன் கூறியுள்ளார்.
இது குறித்து இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது,
அ.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கட்சி அமைப்பை வலுப்படுத்தும் வகையில் புதிய நிர்வாகிகளை நியமனம் செய்து உள்ளார். ஆனால் அவருக்கு அந்த அதிகாரம் இல்லை என்றும், அவரால் நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் செயல்படமுடியாது என்று அமைச்சர்கள் கூறி வருகிறார்கள்.
சசிகலாவால் அவைத்தலைவராக தேர்வு செய்யப்பட்ட செங்கோட்டையன், பொருளாளராக தேர்வு செய்யப்பட்ட திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் நியமனத்தை மட்டும் அமைச்சர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள். சசிகலாவால் துணை பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டவர் தான் தினகரன். எனவே அவர் புதிய நிர்வாகிகளை நியமனம் செய்ய அதிகாரம் உள்ளது. இதனையும் அவர்கள் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.
முன்னாள் முதல்வர் என்ற முறையிலும், அ.தி.மு.கவில் அமைச்சர் பொறுப்பில் இருந்தவர் என்ற முறையிலும் ஓ.பன்னீர்செல்வத்தை அமைச்சர்கள் சந்தித்து பேசியதில் தவறு இல்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.