Skip to main content

குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு!

Published on 14/07/2022 | Edited on 14/07/2022

 

 Hall Ticket Release for Group 4 Exam!

 

விஏஓ மற்றும் பல அரசு துறைகளில் இளநிலை உதவியாளர் உள்ளிட்ட 7,382 பணியிடங்களுக்கு குரூப் 4 தேர்வு நடைபெற இருக்கும் நிலையில், இத்தேர்வுக்கு 21 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். ஜூலை 24ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தேர்வு நடைபெற உள்ள நிலையில், 10 நாட்களுக்கு முன்பே அதற்கான ஹால் டிக்கெட் தற்போது வெளியாகி உள்ளது. ஹால் டிக்கெட்டைwww.tnpsc.gov.in என்ற தளத்தில் ஓடிஆர் கணக்கு எண்ணை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஹால் டிக்கெட்டில் தேர்வில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள், வழிமுறைகள் குறிப்பிடப்பட்டுள்ளது.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

டி.என்.பி.எஸ்.சி தேர்வர்கள் கவனத்திற்கு; வெளியான முக்கிய அறிவிப்பு

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Important announcement on Attention TNPSC Candidates

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC) மூலம் தமிழக அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப போட்டித் தேர்வுகளை நடத்தி வருகிறது. இந்த நிலையில், டி.என்.பி.எஸ்.சி குரூப்-1, குரூப்-2, குரூப்-4 உள்ளிட்ட தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வுகளுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘6,244 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-4 தேர்வு வரும் ஜூன் 9ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. அதே போல், 90 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-1 தேர்வு ஜூலை 13ஆம் தேதி நடைபெறும். 29 பணியிடங்களுக்கான குரூப் 1-B மற்றும் குரூப் 1-C தேர்வு ஜூலை 12ஆம் தேதி நடைபெறும். 

2,030 காலி பணி இடங்களுக்கான குரூப்-2, குரூப்- 2A தேர்வு வரும் செப்டம்பர் 28ஆம் தேதி நடைபெறும். அதே போல், டிப்ளமோ/ ஐடிஐ அளவில் 730 பணியிடங்களுக்கான தொழில்நுட்பப்பிரிவு தேர்வுகள் வரும் நவம்பர் 17ஆம் தேதி நடைபெறும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர பிற அரசு தேர்வுகளுக்கான தேதிகளையும் டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டுள்ளது. மேலும், டி.என்.பி.எஸ்.சி.யின் அனைத்து தேர்வுகளுக்கும் தமிழ் தகுதித் தேர்வு கட்டாயம் எனக் கூறப்பட்டுள்ளது. 

Next Story

‘10ஆம் வகுப்பு தேர்வு எழுதும் தனித் தேர்வர்கள் கவனத்திற்கு’ - தேர்வுத்துறை முக்கிய அறிவிப்பு

Published on 22/02/2024 | Edited on 22/02/2024
appearing for Class 10th Exam Dept of Exam
மாதிரிப் படம்

தமிழகத்தில் வரும் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைபெறவுள்ள பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வெழுத ஆன்லைன் மூலம் விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் நாளை மறுநாள் (24.02.2024) பிற்பகல் 2 மணி முதல் இணையதளத்தின் வாயிலாக தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், “பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் தனித்தேர்வர்களுக்கான தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளை www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்குச் சென்று ஹால் டிக்கெட் என்ற வாசகத்தினை கிளிக் செய்ய வேண்டும். அதன்பின்னர் தோன்றும் பக்கத்திலுள்ள எஸ்.எஸ்.எல்.சி. பப்ளிக் எக்ஸ்சாமினேசன் மார்ச் / ஏப்ரல் - 2024 ஹால் டிக்கெட் டவுன்லோடு என்ற வாசகத்தினை கிளிக் செய்ய வேண்டும். அப்போது தோன்றும் பக்கத்தில் தங்களது விண்ணப்ப எண், நிரந்த பதிவெண், மற்றும் பிறந்த தேதியினைப் பதிவு செய்து, தேர்வுக்கூட நுழைவுச்சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மேலும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு அறிவியல் பாட செய்முறைத் தேர்வுகள் 26.02.2024 முதல் 28.02.2024 வரை, அறிவியல் பாட செய்முறை பயிற்சி வகுப்புகள் நடைபெற்ற பள்ளிகளிலேயே நடைபெறவுள்ளன. அறிவியல் பாட செய்முறைத்தேர்வுக்கான தேதி குறித்த விவரத்தை தனித்தேர்வர்கள் செய்முறைப் பயிற்சி பெற்ற பள்ளி தலைமையாசிரியரை அணுகி அறிந்து கொள்ள வேண்டும். உரிய தேர்வுக்கூட அனுமதிச்சீட்டின்றி எந்த ஒரு தேர்வரும் தேர்வெழுத அனுமதிக்கப்படமாட்டார்கள். மார்ச் / ஏப்ரல் - 2024 பொதுத்தேர்விற்கான கால அட்டவணையை www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று அறிந்து கொள்ளலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.