திருச்சி ரயில்வே ஜங்ஷன் மேம்பாலப் பணியானது கடந்த 2014ஆம் ஆண்டு தொடங்கியது. 81 கோடியே 40 லட்சம் செலவில் 6 வழிகள் கொண்ட இப்பாலத்தில் அனைத்து வழித்தட கட்டுமானப் பணிகளும் முடிவடைந்த நிலையில், மன்னார்புரம் செல்லும் பாலப்பணிகள் மட்டும் அந்தரத்தில் அப்படியே நிற்கிறது. இதற்குக் காரணம், ராணுவ நிலம் 0.66 ஏக்கர் கையகப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள தாமதமே.
இது தொடர்பாக திருநாவுக்கரசர் எம்பி, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து கோரிக்கை வைத்தார். இதையடுத்து மத்திய அமைச்சர் அனுப்பியுள்ள கடிதத்தில், “திருச்சி மன்னார்புரம் பகுதியில் மக்கள் பயன்பாட்டுக்காக கட்டப்பட்ட ரெயில்வே மேம்பாலத்தின் பணிகளை முடிக்க ராணுவ இடத்தை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
இது தொடர்பாக மாநில அரசிடமிருந்து ராணுவ இடத்துக்கு சமமான உள்கட்டமைப்புக்காகவோ அல்லது அதற்கு ஈடான தொகையைப் பெற்றுக்கொண்டோ இந்தத் திட்டத்துக்கான பணிகளைத் தொடங்க அனுமதி அளிப்பது குறித்து சாத்தியக் கூறுகள் உள்ளதா? என்பதைக் கருத்தில்கொண்டு விரிவான திட்ட வரைவு தயார் செய்ய ராணுவ அமைச்சகத்திடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்று அந்தக் கடிதத்தில் தொிவிக்கப்பட்டுள்ளது.