மேற்பனைக்காடு அரசு நடுநிலைப்பள்ளியில் நடிகர் ஜி.வி.பிரகாஷின் திட்டத்தில் மழலையர் வகுப்பை அறந்தாங்கி கல்வி மாவட்ட அதிகாரி தொடங்கி வைத்து மாணவர்களுக்கு புத்தகங்களை வழங்கினார்
திரைப்பட நடிகர் ஜி.வி.பிரகாஷ் அரசுப் பள்ளிகளை வளப்படுத்தவும், அரசுப்பள்ளிகளை மூடுவதை தடுத்து மாணவர்கள் சேர்க்கையை அதிகப்படுத்தவும் அரசுப் பள்ளிகளில் மழலையர் வகுப்புகளை தொடங்கி அதற்காண செலவுகளை தன்னார்வ அமைப்புகளோ அல்லது தனி ஒருவரோ ஏற்றுக் கொண்டால் அரசுப்பள்ளிகளை காப்பாற்ற முடியும் என்று 3 ஆண்டுகளுக்கு ஒரு அரசுப் பள்ளியை தத்தெடுத்து அதற்காண அனைத்து செலவுகளையும் ஏற்றுக் கொண்டதுடன் இதே போல ஆர்வமுள்ள இளைஞர்களும் தத்தெடுக்கலாம் என்றார்.
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள மேற்பனைக்காடு கிழக்கு கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியை துபாயில் பொறியாளராக உள்ள நிமல் ராகவன் 3 ஆண்டுகளுக்கு மழலையர் வகுப்பு நடத்த ஆசிரியர் புத்தகம் மற்றும் அனைத்துச் செலவுகளையும் ஏற்றுக் கொண்டதால் புதன் கிழமை மழலையர் வகுப்பு தொடக்கவிழா பள்ளி வளாகத்தில் தலைமை ஆசிரியை சுமதி தலைமையில் முன்னால் ஊராட்சிமன்றத் தலைவர் கோவிந்தராசு சிதம்பரம் ஆகியோர் முன்னிலையில் நடந்தது. விழாவில் அறந்தாங்கி கல்வி மாவட்ட அதிகாரி திராவிடச்செல்வம் (பொ) கலந்து கொண்டு வகுப்புகளை தொடங்கி வைத்து புத்தகங்களை வழங்கினார். விழா ஏற்பாடுகளை ஆசிரியர் சதீஷ்குமார் மற்றும் ஆசிரியர்கள் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர். முடிவில் ஆசிரியை செல்வராணி நன்றி கூறினார்.