கடடைக்கு சொந்தமான கன்பூர் சிங் வீட்டு குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த, ஒரு லட்சம் மதிப்பிலான பான்மசாலாவை கண்டறிந்தனர். பின்னர் பான் மசாலாவை பறிமுதல் செய்து, சம்பந்தப்பட்ட கன்பூர் சிங்கை கைது செய்தனர்.
இதனிடையே கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த சிறுப்பாக்கம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட சேலம் - விருத்தாசலம் மாநில நெடுஞ்சாலையில் உள்ள அரசங்குடி சோதனைச் சாவடியில், இன்று காலை வேப்பூர் காவல் ஆய்வாளர் கவிதா,
சிறுபாக்கம் உதவி ஆய்வாளர் ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசார் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த போது, சேலத்திலிருந்து விருத்தாசலம் பகுதி நோக்கி வந்து கொண்டிருந்த ஒரு மினி லாரியை நிறுத்தி சோதனையிட முயன்ற நிலையில் அந்த வாகனம் நிற்காமல் சென்றதால் சந்தேகத்தின் பேரில் அந்த வாகனத்தை பின் தொடர்ந்து சென்று நிறுத்தினர். அப்பொழுது புகையிலை வாசனை வந்ததால் சந்தேகமடைந்த போலீசார் வாகனம் முழுவதையும் சோதனை செய்ததில் யாரும் சந்தேகிக்காத வகையில் மாட்டு தீவன மூட்டைகளை மேலே அடுக்கி அதன் கீழ் முழுவதும் அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் மற்றும் குட்கா மூட்டைகள் 16 மற்றும் பெரிய அட்டை பெட்டிகள் 25, சிறிய அட்டை பெட்டிகள் 3 என சுமார் 10 லட்சம் மதிப்பிலான போதை பொருட்கள் நூதன முறையில் மறைத்து கொண்டு செல்வது தெரியவந்தது.
அதையடுத்து வாகனத்தை ஓட்டிவந்த சேலம் மாவட்டம் எர்னாபுரம் பகுதியை சேர்ந்த தனபால் (28), அவருடன் கீளினராக வந்த அதே பகுதியை சேர்ந்த ஆனந்த் (28) ஆகிய இருவரையும் பிடித்து விசாரணை செய்ததில் வாகனத்தின் உரிமையாளர் அதேபகுதியை சேர்ந்த மதன்(எ)தனசேகர் (38) என்பவர் வாகனத்தை கொடுத்து விருத்தாசலம் செல்ல வேண்டும் எனவும், அங்கிருந்து தொலைபேசி தகவல் வரும் எனவும், அதன் பிறகு எங்கு செல்ல வேண்டும் என்பது தெரியவரும் எனவும் தெரிவித்து அனுப்பி வைத்தார் என தெரிவித்தனர்.
அதையடுத்து சிறுபாக்கம் போலீசார் 12 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்கள் மற்றும் வாகனத்தை பறிமுதல் செய்தனர். மேலும் வாகன ஓட்டுனர் மற்றும் கிளீனர் இருவரையும் கைது செய்தனர்.