Published on 15/12/2018 | Edited on 15/12/2018
![v](http://image.nakkheeran.in/cdn/farfuture/XVcXRIqkUuOW_x8jj-h5XdvT1f-uhS3EcFK333HULj8/1544904054/sites/default/files/inline-images/Untitled-1_1.png)
நுங்கம்பாக்கம் சிபிஐ அலுவலகத்தில் அமைச்சர் விஜயபாஸ்கரிடம் நடைபெற்ற விசாரணை நிறைவு பெற்றதாக தகவல்கள் வந்துள்ளன.
குட்கா முறைகேடு வழக்கில் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் முன்னாள் அமைச்சர் ரமணா ஆஜராகும்படி சிபிஐ நேற்று சம்மன் அனுப்பியிருந்தது.
![ramana](http://image.nakkheeran.in/cdn/farfuture/CTNyZAmppXWtOVcAM7zGpn8Z45f2YVX03qWkkDi26wA/1544906724/sites/default/files/inline-images/777592cf-46d3-4029-9657-cf99d3c33ddc.jpg)
சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று ஆஜராக வேண்டுமென சிபிஐ சம்மன் அனுப்பியுள்ள நிலையில், நுங்கம்பாக்கத்தில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் இன்று முன்னாள் அமைச்சர் ரமணா ஆஜராகினார். அவரிடம் தொடர்ந்து 9 மணிநேரம் விசாரணை நடைபெற்றது. அதனை அடுத்து விஜயபாஸ்கர் நுங்கம்பாக்கம் சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகினார். அவரிடம் சிபிஐ நடத்திய விசாரணையும் தற்போது நிறைவு பெற்றதாக தகவல்கள் வந்துள்ளது.