துணைமுதல்வர் ஓபிஎஸ்சின் சொந்த ஊரான பெரியகுளம் வடகரை கம்மா கரை பகுதியில் வசித்து வரும் செல்வம் பெரியகுளம் நகர் மற்றும் ஒன்றிய பகுதியில் கஞ்சா விற்பனை செய்வது ஓரு தொழிலாகவே வைத்து இருந்தார்.
இப்படிப் பட்ட கஞ்சா வியாபாரியை பல நாட்களாக காவல்துறையினர் தேடி வந்த நிலையில் இன்று காவல்துறை ஆய்வாளர் சுரேஷ் சார்பு ஆய்வாளர் மற்றும் காவல்துறையினர் ரோந்து சென்றபோது கையும் களவுமாக கஞ்சா வியாபாரி பிடிபட்டார். அவரிடம் இருந்து 1,1/2 கிலோ கஞ்சா பரிமுதல் செய்யப்பட்டு கைது செய்த காவல்துறையினர் செல்வத்திடம் விசாரணை மேற்கொண்டதில் பல்வேறு இடங்களிலிருந்து கஞ்சா வாங்கி வந்து பெரியகுளம் பகுதியில் விற்பனை செய்ததை ஒப்புக் கொண்டதின் பேரில் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.
இதுகுறித்து பெரியகுளம் காவல்துறை ஆய்வாளர் சுரேஷ் கூறுகையில் ... பெரியகுளம் பகுதியில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட எந்த ஒரு பொருளை விற்பனை செய்தாலும் உடனடியாக பொதுமக்கள் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவிப்பதற்காக தொடர்பு எண்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருவதாகவும் தனிப்படை அமைத்து கஞ்சா மது பாட்டில்கள் புகையிலை போதை பொருட்களை தடுக்கும் விதத்தில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாஸ்கரன் உத்தரவின் பேரில் காவல்துறையினர் தடுக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும் பொதுமக்கள் இவ்வாறான பொருட்கள் விற்பனை செய்பவர்கள் குறித்து தெரிய வந்தால் உடனே காவல்நிலையத்திற்கு தெரியப்படுத்த வலியுறுத்தப்பட்டு வருகிறது என்று கூறினார்.