மத்திய பா.ஜ.க. மோடி அரசு வந்த பிறகு ஜவுளித் தொழில் புரிபவர்களுக்கு ஜி.எஸ்.டி வரி என்கிற சுருக்குக் கயிறு அப்படியே நசுக்கி கொண்டிருக்கிறது. இதன் விளைவாக தொழிலதிபர்கள் முதல் தொழிலாளர்கள் வரை பொருளாதார இழப்பாலும் கடன் சுமையாலும் தவித்து வருகிறார்கள். பனியன் தொழில் என்கிற ஆயத்த ஆடை உற்பத்தி செய்யும் தலைநகராக இருக்கிற திருப்பூரில் மிகப்பெரிய திண்டாட்டத்தை அங்கு வாழும் மக்கள் அனுபவித்து வருகிறார்கள்.
ஒரு பொருள் உற்பத்தி செய்யப்படு அந்த உற்பத்தியில் தொடங்கி விற்பனை வரை பல்வேறு நிலைகளில் வரி வரி வரி என வரி மேல் வரி போடுகிறது மத்திய அரசு. இதில் கட்டிய வரிகளில் பல நிலைகளை திரும்ப ஒப்படைக்க வேண்டியது மத்திய அரசின் பொறுப்பு. ஆனால் அப்படி திருப்பி கொடுக்க வேண்டிய ஜிஎஸ்டி வரி ரீபண்ட் தொகை மட்டும் பல லட்சம் கோடி மத்திய அரசு வைத்துள்ளது.
இந்த நிலையில் திருப்பூர் பாராளுமன்ற தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி. திருப்பூர் சுப்பராயன் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில் "பனியன் தொழிலுக்கு வரி விலக்கு, காற்றாலை மற்றும் சூரிய ஒளி மின்சார உற்பத்திக்கு மானியம் வழங்கக்கோரியும், திருப்பூரில் தொழிற் பூங்கா அமைக்க வலியுறுத்தியும், பனியன் மற்றும் ஆயத்த ஆடை துறையை சேர்ந்த ரிஸ்கி எக்ஸ்பெக்ட்களுக்கு வழங்கப்பட வேண்டிய தொகையை உடனடியாக வழங்க வலியுறுத்தியும், பனியன் தொழிலாளர்களுக்கு வீட்டு வசதிகள் ஏற்படுத்தித்தரக்கோரியும்" வலியுறுத்தியுள்ளார்.