Skip to main content

தங்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலு; முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து!

Published on 22/05/2024 | Edited on 22/05/2024
Greetings from CM MK Stalin for Mariyappan Thangavelu who won gold

2024 ஆம் ஆண்டுக்கான பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டி ஜப்பானில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த தடகள வீரர் தங்கவேலு மாரியப்பன் உயரம் தாண்டுதல் பிரிவில் 1.88 மீட்டர் தாண்டி தங்கம் வென்று அசத்தியுள்ளார்.

இந்நிலையில் பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “ஜப்பானின் கோபே நகரில் நடைபெற்று வரும் உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் ஆடவர் உயரம் தாண்டுதலில் தங்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலுக்கு வாழ்த்துகள். வருங்காலத்தில் இன்னும் பெரிய உயரங்களை எட்ட வாழ்த்துகள்” எனத் தெரிவித்துள்ளார்.

அதே போன்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில், “ஜப்பான் நாட்டின் கோபே நகரில் நடைபெறும் பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் உயரம் தாண்டுதல் போட்டியில் தங்கம் வென்று சாதனை புரிந்துள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். இன்னும் பல உச்சங்களைத் தொட்டு நாட்டிற்கு மென்மேலும் பெருமை சேர்க்க வாழ்த்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

சார்ந்த செய்திகள்