ஒரு ஆகஸ்ட் 15ஆம் தேதி 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்த தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுக்கு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்கக ஆணையர் தரோஸ் அகமது உத்தரவு பிறப்பித்துள்ளார். கிராம மக்கள் அனைவரும் பங்கேற்கும் வகையில் இடம், நேரத்தை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் முன்னதாக வருடத்திற்கு நான்கு நாட்கள் என ஜனவரி 26, மே 1, ஆகஸ்ட் 15, அக்டோபர் 2 ஆகிய தேதிகளில் கிராமசபை கூட்டம் நடந்துவந்த நிலையில். தமிழகத்தில் இனி ஆண்டிற்கு 6 கிராமசபை கூட்டங்கள் நடத்தப்படும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார் .அதன்படி இனி கிராமசபை கூட்டங்கள் ஜனவரி 26, மே 1, ஆகஸ்ட் 15, அக்டோபர் 2, மார்ச் 22, நவம்பர் 1 ஆகிய தேதிகளில் நடத்தப்படும். செலவின வரம்பு ஐந்தாயிரமாக உயர்த்தப்பட்ட நிலையில் கிராம சபை கூட்டம் 15-ம் தேதி நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.