Skip to main content

வாக்காளர் அடையாள அட்டை இல்லை!  எப்படி வாக்களிப்பது?

Published on 20/03/2019 | Edited on 20/03/2019

இந்திய தேர்தல் ஆணையம் செயதி குறிப்பு ஒன்றை வெளியீட்டுள்ளது. இதன் படி வாக்காளர்கள் தங்கள் வாக்காளர் அடையாள அட்டையை தொலைத்து விட்டாலோ (அல்லது) உடைந்து விட்டாலோ கவலை வேண்டாம். வாக்காளர்கள் ஒவ்வொருவருக்கும் அந்தந்த மாவட்ட தேர்தல் அலுவலரால் வாக்களிக்கும்  சீட்டு வாக்காளர்களுக்கு வழங்கப்படும். இந்த சீட்டு தேர்தல் ஆணையத்தால் வழங்கப்படுகிறது. இத்துடன் "வாக்காளர் அடையாள அட்டை" எடுத்து செல்ல வேண்டும். 
 

vote

அடையாள அட்டை இல்லையென்றால் எந்த அடையாள அட்டையை எடுத்து செல்ல வேண்டும் என்பது தொடர்பான வழிமுறையை தேர்தல் ஆணையம் வெளியீட்டுள்ளது.
1.பாஸ்போர்ட் (Passport)
2. ஓட்டுனர் உரிமம் (Driving License)
3. வங்கிக்கணக்கு புத்தகம் (Bank pass book)
4.பான் கார்டு (PAN CARD)
5.சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட அடையாள     
   அட்டை
6.ஆதார் கார்டு (Aadhar Card)
7.மத்திய தொழிலாளர் நலத்துறையின் ஹெல்த் இன்சுரன்ஸ் ஸ்மார்ட் அட்டை
8.மத்திய மற்றும் மாநில அரசுகளின் ஓய்வூதியாதர்களின் ஆவணங்கள்.
 

உள்ளிட்ட ஆவணங்களை தேர்தல் நாள் அன்று வாக்காளர்கள் இத்தகைய ஆவணங்களில் ஒன்றை எடுத்து சென்று வாக்களிக்கலாம். வாக்காளர் அடையாள அட்டை தவறியர்கள் .இந்த ஆவணங்களில் ஏதாவது ஒன்றை பயன்படுத்தி 100% வாக்கு என்ற இலக்கை இந்திய தேர்தல் ஆணையத்தோடு இணைந்து எய்திடுவோம். இந்திய தேர்தல் ஆணையம் ஒவ்வொரு நாளும் மக்கள் எளிதாக சென்று வாக்களிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவது என்பது குறிப்பிடத்தக்கது.


பி.சந்தோஷ் , சேலம் 

சார்ந்த செய்திகள்

Next Story

'தமிழகத்தின் தேர்தல் முடிவுகள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும்'-மோடி ஆரூடம்

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
'The election results of Tamil Nadu will surprise everyone'-Modi Arudam

நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

தமிழகத்தில் முதற்கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெற இருப்பதால், தற்போதே தேர்தல் பரப்புரைகளுக்கான தீவிர முயற்சிகளை அரசியல் கட்சிகள் எடுத்து வருகிறது. இந்த நிலையில் இன்று சேலத்தில் பிரதமர் மோடி கலந்து கொள்ளும் பாஜக பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. பாமக, பாஜக கூட்டணியில் சேர்ந்திருக்கும் நிலையில், இன்று நடைபெறும் பிரச்சாரக் கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் அன்புமணி ராமதாஸ், ஏனைய கூட்டணி கட்சித் தலைவர்கள் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், 'தமிழ்நாட்டின் தேர்தல் முடிவுகள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தப் போகிறது. எங்கள் கட்சி மாநிலம் முழுவதும் வலுவான சக்தியாக உருவாகி வருகிறது. இனி திமுகவை ஆதரிக்கும் மனநிலையில் மக்கள் இல்லை. கோயம்புத்தூரில் இருந்து மேலும் சில காட்சிகள் இங்கே' என கோயம்புத்தூரில் நடைபெற்ற பாஜக நிகழ்ச்சி குறித்த காட்சிகளை பிரதமர் மோடி வெளியிட்டுள்ளார்.

Next Story

தேர்தல் நடத்தை அமலுக்குப் பிறகு எடுத்த முதல் நடவடிக்கை; தேர்தல் ஆணையம் அதிரடி!

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
The Election Commission is in action taken after implementation of electoral conduct

பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று முன் தினம் (16-03-24) பிற்பகல் நாட்டின் 18 வது நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டது. மொத்தமாக ஏழு கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. நாடு முழுவதும், ஏழு கட்டங்களாக நடைபெறும், இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, வரும் ஜுன் 4ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு என தீவிரம் காட்டி வரும் நிலையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே வேளையில், தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகளைத் தேர்தல் ஆணையம் அமலுக்கு கொண்டு வந்தது. இது குறித்த அறிவிப்பில், ‘சமூக வலைத்தளங்களில் அரசியல் கட்சியினர் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். ஆன்லைன் மூலம் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதை தடுக்க ஆன்லைன் பரிவர்த்தனையும் கண்காணிக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. தேர்தல் ஆணையர்கள் உள்பட யாரை வேண்டுமானாலும் விமர்சனம் செய்யலாம். ஆனால், வதந்தி பரப்பக் கூடாது. மாலை, இரவு நேரங்களில் வங்கிகள் வாகனங்களில் பணம் எடுத்துச் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. முன்கூட்டியே அறிவிக்கப்படாத தனி விமானப் பயணங்கள் அனைத்தும் கண்காணிக்கப்படும்.

வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும். 50% வாக்குச் சாவடிகளில் நடைபெறும் வாக்குப்பதிவு இணைய வழியில் நேரலை செய்யப்படும். தலைமைச் செயலகம், அரசு அலுவலகங்களில் உள்ள தலைவர்கள் படங்கள் உள்ளிட்டவை அகற்றப்பட வேண்டும் என்று தெரிவித்தது. அதே போல், தலைமைத் தேர்தல் ஆணையம் பல விதிமுறைகளை அறிமுகப்படுத்தி தேர்தல் நடத்தைக்கு கீழ் அமலுக்கு கொண்டுவந்தது. 

இந்த நிலையில், தேர்தல் நடத்தை அமலுக்கு வந்த பிறகு, முதன்முறையாக தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. அதில், மேற்கு வங்க மாநில டி.ஜி.பியாக பொறுப்பு வகித்து வந்த ராஜீவ் குமாரை இடமாற்றம் செய்ய தலைமைத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதே போல், குஜராத், உத்தரப்பிரதேசம், பீகார், ஜார்க்கண்ட், இமாச்சலப்பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநில உள்துறை செயலாளர்களையும் மாற்ற உத்தரவிட்டுள்ளது.