கணவர் நடராஜனனின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக மார்ச் 20ம் தேதி பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து பரோலில் வந்தார் சசிகலா. 15 நாட்கள் பரோலில் வந்த சசிகலாவின் பரோல் ஏப்ரல் 3ம் தேதியுடன் முடிகிறது. இந்நிலையில் பரோல் முடிவதற்கு 3 நாட்கள் உள்ள நிலையில் இன்று காலை தஞ்சையில் இருந்து பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைக்கு புறப்பட்டுச் சென்றார்.
இந்நிலையில் இதுகுறித்து இன்று தஞ்சையில் செய்தியாளர்களை சந்தித்த திவாகரன்,
ஆளும்கட்சி எம்.பி., எம்.எல்.ஏக்கள் மறைமுகமாக சசிகலாவிடம் பேசினர். தங்கள் பதவி பறிபோய்விடும் என்பதற்காக சசிகலாவை ஆளும்கட்சியினர் நேரடியாக சந்திக்கவில்லை. நடராஜனின் நண்பர் என்பதால் கே.என்.நேரு. சசிகலாவை சந்தித்து ஆறுதல் கூறினார்.
மேலும் சசிகலாவுக்கு 15 நாட்கள் பரோல் கேட்ட நிலையில், 10 நாள்தான் கிடைத்தது. எனவே இன்று சசிகலா சிறை திரும்புகிறார். இவ்வாறு அவர் கூறினார்.